எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மே 4-- மகாராட்டிர மாநிலத்தில் விவசாயிகளின் பிரச்சினைகுறித்து விவாதிக்க சிறப்புக்கூட்டத் தொடரைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தியுள்ளன.

காங்கிரசு கட்சி, தேசிய வாத காங்கிரசு கட்சி, சமாஜ் வாடி கட்சி, விவசாயிகள் மற் றும் தொழிலாளர்கள் கட்சி, குடியரசுக் கட்சி (கவாதி) மற் றும் அய்க்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர் கள் ஒன்றிணைந்து மகாராட் டிர மாநிலத்தின் சட்டமன்றத் தின் சிறப்புக் கூட்டத் தொட ரைக் கூட்டி விவசாயிகளின் பிரச்சினைகள், கடன் தள்ளு படி குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளனர்.

விவசாயிகள் பிரச்சினை மற்றும் கடன் தள்ளுபடி செய் வதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மகாராட்டிர மாநில ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்னவிசுக்கு அழுத்தம் கொடுக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி மகாராட்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் கோரி யுள்ளனர்.

மகாராட்டிர மாநில எதிர்க் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணா விக்கே பாடீல் கூறும்போது, “கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள் வறட்சியை சந் தித்து வருகிறார்கள். விவசா யம் சார்ந்த பிரச்சினைகளும், விவசாய விளைபொருள்களின் விலைச் சரிவும் அவர்களை பாதித்துள்ளது. வாங்கிய கடன் களைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் விவசாயிகள் இல்லை. மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து வருகின்றனர். அந்நிலையிலி ருந்து அவர்களை மீட்டெடுக்க விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

விவசாயிகளின் பிரச்சினை கள் தீர்ப்பதற்கான கோரிக்கை களை வலியுறுத்தி எதிர்க்கட்சி கள் ‘சங்கர்ஷ் யாத்ரா’ எனும் மக்களிடம் முன்னெடுக்கின்ற பயணத்தை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளதாக கூறுகிறார்கள். கொங்கன் மாவட்டம் மற்றும் இதர மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் அரசைக் கண்டித்துப் பேரணி 11.5.2017 முதல் மூன்று நாள் கள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆளும் பாஜகவுக்கு எச்ச ரிக்கை விடுக்கும் வண்ணம்  அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார் பில் நடைபெற உள்ள பய ணத்தின்போது, விவசாயிக ளையும், விவசாயிகளின் தற் கொலைகளால் பாதிப்புக்குள் ளான குடும்பத்தினரையும் எதிர்க்கட்சியினர் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். மூன்று கட்டமாக நடைபெறுகின்ற அரசைக்கண்டித்து எதிர்க்கட்சியினர் சார்பில் நடைபெறு கின்ற எதிர்ப்புப் பயணத்தின் இறுதியில் விதர்பா, மராத் வாடா, வடக்கு மற்றும் மேற்கு மகாராட்டிரா பகுதி களில் உள்ள மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத் தில் பாஜக ஆட்சிப் பொறுப் பேற்றதையடுத்து, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டது. இதையடுத்து, மகா ராட்டிர மாநிலத்தில் 30,500 கோடி ரூபாய் நிதியை மகா ராட்டிர மாநிலத்துக்கு ஒதுக் கிட எதிர்க்கட்சிகள் வலியு றுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இம் முடிவையடுத்து, ஆளும் பாஜக சார்பில் ‘சம்வத் யாத்ரா’ எனும் பெயரில் நேரிடையாக மக்களிடம் சென்று, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசு எடுத் துள்ள நடவடிக்கைகள்குறித்து எடுத்துச் சொல்லப்போவதா கக் கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner