எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, மே 6 அண் மையில் மும்பை திரையுல கின் நடிகையான கஜோல் மாட்டிறைச்சியை பக்குவமாக சமைப்பது குறித்து அவர் நண்பர் ஒருவர் மாட்டிறைச்சி சமைக்கும் காட்சிப்பதிவை வெளியிட்டிருந்தார். அப் பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பி யதை அடுத்து, டிவிட்டரில் எருமை மாட்டின் இறைச் சியே சமைக்கப்பட்டதாகக் கஜோல் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் அப்பதிவை நீக்கி விட்டு, பிறருடைய மத உணர் வுகளை புண்படுத்த விரும்ப வில்லை என்று  குறிப்பிட்டு அக்காட்சிப்பதிவை அவர் நீக்கி விட்டார். ஒருவருடைய உணவுப் பழக்கத்தில் மற்றவர்கள் சகிப் பின்மையுடன் இருப்பது ஆபத் தானது என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டு நடிகை கஜோ லுக்கு தம்முடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரசு கட்சியின் தலைவரு மாகிய மம்தா பானர்ஜி கூறி யுள்ளதாவது:

“நான் அந்த நடிகையின் பெயரை கூற மாட்டேன். நடிகர் ஷாருக்கானுடன் பல படங் களில் இணைந்து நடித்திருக் கிறார். அந்த நடிகை அண்மை யில் இணையத்தில் காட்சிப் பதிவை பதிவேற்றியிருந்தார். அதைத்தொடர்ந்து, இணையத் தில் அவர் கடுமையான வசவு களுடன் தொல்லைக்குள்ளா னார். அதற்கு அவர் பதில் கூறும்போது, பதிவேற்றிய காட்சிப்பதிவில் சமைக்கப்பட் டது மாட்டிறைச்சியில் எருமை யின் மாட்டிறைச்சி என்று விளக்கம் அளித் துள்ளார். இது மிகவும் ஆபத்தான சூழலாகும். சிலரின் சகிப்பின்மையால் ஆபத்தான நிலைகள் ஏற்படு கின்றன. மற்றவர்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை கூறுபவர்களாக பிறர் இருக் கிறார்கள்’’ என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner