எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகாஷ்மீரில் தற்போது நடந்துவரும் அனைத்து வன்முறைச்செயல்களுக்கும் நிர்வாகத்திறனில்லாதவரை பதவியில் அமர்த்திய மோடியே காரணம் என்பது மனோகர் பாரிக்கரின் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பதவி விலகினேன், என்று பிடிஅய் செய்தி நிறுவனத்திற்கு ஏப்ரல் 14 ஆம் தேதி முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், இன்னாள் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

ஓர் அமைச்சர் என்பவர் நிர்வாகத்தை எவ்வித மனசங்கடத்திற்கும் ஆளாகாமல் ஆசாபாசங்களைப் புறந்தள்ளி தனது கடமையை ஆற்றவேண்டும் என்பதே விதி.

ஆனால் ராணுவத்தின் நடவடிக்கையால் ஏற்பட்ட மன அழுத்தம்தான், தான் பதவிவிலக காரணம் என்று கூறி யிருப்பது, பாதுகாப்புத்துறை போன்ற ஒரு மிகவும் முக்கிய மான பதவியில் இவ்வளவு பலவீனமான ஒருவர் இத்தனை நாள் பதவிவகித்திருப்பது மிகவும் கேள்விக்குரிய ஒன்றாகி உள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக, தான் இருந்தபோது இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு அமரும்போது, பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து விவாதிக்கின்றனர்.

இதனால் சிக்கல்கள் அதிகரித்து விடுகிறது, ஆகையால் தீர்வுகாண முடியாதநிலை உருவாகிவிடுகிறது, இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற விவகாரங்கள் தந்த மன அழுத்தம் காரணமாகவே, மத்திய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு, தாம் மீண்டும் வர நேரிட்டதாக பாரிக்கர் தமது பேச்சில் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பிடிஅய் செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்தத் தகவலை இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இதை மனோகர் பாரிக்கரும் மறுக்கவில்லை.

ஆனால் கோவா முதலமைச்சர் பாரிக்கர் அதுபோன்ற கருத்தைத் தெரிவிக்க வில்லை என பாரதிய ஜனதா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மனோகர் பாரிக்கர் கலந்து கொண்ட விழாவில் பிடிஅய் செய்தியாளர் யாரும் செய்தி சேகரிக்க வரவில்லை என்றும் பாஜகவின் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஅய் போன்ற செய்தி நிறுவனங்கள் ஆதாரமின்றி எந்த ஒரு செய்தியையும் வெளியிடாது, அதே போல் அந்த செய்தியை முகாந்திரமாக வைத்துதான் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிடும்.

ஆகவே பிடிஅய்-யின் நம்பகத்தன்மை என்பது உறுதியானது.

மேலும் மனோகர் பாரிக்கரே இந்த செய்திக்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்கிறது. ஆனால் பாஜகவினர் அரசு தரப்பு செய்திகயையே போலி யானது என்று கூறி மனோகர் பாரிக்கரை காப்பாற்ற முயற்சி செய்கிறது,

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிவந்து, உரி ராணுவ முகாம் தாக்குதல், பதான் கோட் தாக்குதல் போன்றவைகள் ராணுவ உளவுத்துறையின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில் மன உறுதி யில்லாத ஒருவரை பாதுகாப்பு அமைச்சராக நியமித்ததன் பயனை தற்போது பாஜக அறுவடை செய்து கொண்டிருக் கிறது என்பது இவரது பேட்டியின் மூலம் உறுதியாகிறது.

பொதுவாகவே மோடி பதவிஏற்றது முதல் அனைத்துத் துறைக்கும் அவரே நேரடியாக அமைச்சர் போல் நடந்து வருகிறார்.

துறை குறித்த பேச்சுக்களைப் பேசுவதைத்தவிர இதர பேச்சுக்களை தொடர்ந்து பேசிவருகின்றனர். எடுத்துக்காட் டாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரின் துறை போக்குவரத்து மற்றும் கப்பல்துறை.

ஆனால் அவர் தனது துறைகுறித்து பேசுவதைவிட திராவிட கட்சிகளின் மீது குறைசொல்வது, மத்திய அரசுக்கு எதிராக போராடு பவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள், மோடிக்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று தொடர்ந்து பேசிக்கொண்டு வருவதுதான் அவரின் வேலை போலும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner