எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 13 இந்தியாவில் நடைபெறும்அனைத்துதேர் தல்களிலும் வாக்காளர் எந்த கட்சிக்குவாக்களித்தார்என் பதை உறுதி செய்யும் ஒப்பு கைச் சீட்டுடன் கூடிய வாக் குப்பதிவுஇயந்திரங்கள்பயன் படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.

தேர்தல்களில் பயன்படுத் தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நம்பகத் தன்மை இல்லாதவை, அவற்றில் மாற்றம் செய்து தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று பல் வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அவர்களின் இந்த கருத்தினை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்தும், தேர்தல் சீர்திருத்தங்கள்குறித் தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் ஆணையம் டில்லி யில் நேற்று ஒரு அனைத்துக் கட்சிகூட்டத்துக்குஅழைப்பு விடுத்தது. இந்தக்  கூட்டத் துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங் கீகரிக்கப்பட்ட48மாநிலகட் சிகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. இதில் 7 தேசிய கட்சிகள் மற்றும் 35 பிராந்திய கட்சிகள் கலந்துக் கொண்டன.

கூட்டத்தின் முடிவில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இனிஇந்தியாவில்நடை பெறும் அனைத்து தேர்தல்களி லும்வாக்காளர்எந்தகட் சிக்கு வாக்களித்தார்என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்படும். ஏற்கெனவே தேர்தல் ஆணையம் இயந்தி ரங்களை வாங்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் நிதியும் பெற்றுள்ளது.  இதற்கிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ‘ஹேக்கிங்’ செய்ய முடியும் என குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள் அதனை செய்துகாட்டவும் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில்  தேர்தல்களில் இத்தகையஇயந்திரங்கள் பயன் படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner