எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சண்டிபூர், மே 13 ‘தேஜஸ்' போர் விமானம் மூலமாக விண்ணில் உள்ள இலக்குகளை அழித்து தாக்கும் ஏவுகணைச் சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

"தேஜஸ்' போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்டதாகும். இந்த ஏவுகணையானது மற்ற ஏவுகணையை போல் அல்லாமல் இலக்குகளை நீண்ட தொலைவிலிருந்தும் தாக்கக் கூடியது.

போர்க்காலங்களில் எதிரி நாடுகளின் விமா னங்களை நீண்ட தொலைவிலிருந்தும் பின் தொடர்ந்து சென்று தாக்கக் கூடிய வகையில் நவீன சென்சார் கருவிகள் இந்த ஏவுகணையில் பொருத்தப் பட்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த ஏவுகணைச் சோதனை யானது ஒடிசா மாநிலம், சண்டீபூர் பகுதியில் வெள்ளிக் கிழமை நடத்தப்பட்டது. அப்போது, சோதனைக்காக பறக்கவிடப்பட்ட சிறிய ரக விமானத்தை நீண்ட தொலை வுக்கு அப்பால் வந்த தேஜஸ் விமானத்திலிருந்து புறப்பட்ட ஏவுகணை தாக்கி அழித் தது.

இந்த ஏவுகணைச் சோதனை வெற்றியானது, இந்திய விமானப் படையின் நவீன தொழில்நுட் பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.



தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner