எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், மே 15 கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நகரான கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. தற்போது இத்திட் டத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், வெகுவிரைவில் ரயில் சேவை யும் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதில், 23 இடங் கள் திருநங்கைகளுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலைய துப்புரவுப்பணி, பய ணச்சீட்டு வழங்குதல் போன்ற பணிகள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப் பணிக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யபடுவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு சார் நிறுவனம் ஒன் றானது மூன்றாம் பாலினத்தவர் களுக்கு மொத்தமாக வேலை வாய்ப்பு வழங்குவது இதுவே முதன் முறையாகும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எலியாஸ் ஜார்ஜ் ,இந்த அறிவிப்பு அவர்களுக்கு முக்கியமான ஒன்று. இந்த முதல் முயற்சி வெற்றிகரமாக அமையும் என நாங்கள் நம்பு கிறோம். மற்ற நிறுவனங்களும் இதே போல மூன்றாம் பாலி னத்தவர்களுக்கு வேலைவாய்ப் புகள் வழங்குவதில் முன்னு ரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner