எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, மே 15 மக்க ளவையை கலைத்துவிட்டு சட் டப் பேரவை தேர்தல்களுடன் மக்களவைக்கும் தேர்தல் நடத்த பிரதமர் முன் வர வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநில தலை நகர் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டி: மக்க ளவை தேர்தலு டன் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் களையும் ஒரே நேரத்தில் நடத்த நிதி ஆயோக் கூட் டத்தில் ஆலோசனை தெரி விக்கப்பட்டுள்ளது. இதையே பாஜ.வும் வலியுறுத்தி வரு கிறது. எனவே இந்த ஆண்டே மக்களவையை கலைத்துவிட்டு சட்டப்பேரவை தேர்தல்களு டன் மக்களவை தேர்தலை இணைந்து நடத்த பிரதமர் மோடி முன் வரவேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜ அரசு பல்வேறு விதங்களில் தோல்வியை சந்தித்து வருவ தால் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பாஜ மீண்டும் ஆட் சிக்கு வர முடியாது.  சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை பிரித்து சூழ்ச்சி செய்தே பாஜ வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மோடி அரசு வெற்று வாக்குறுதிகளை மட் டுமே அளித்து வருகிறது. பல் வேறு நிறுவன முதலாளி கள்தான் இந்த ஆட்சியால் பயன்பெற்று வருகின்றனர். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?. இளைஞர்கள் ஒரு கோடி பேருக்கு வேலை, விவசாயி களின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, பொதுமக்களின் வங்கி கணக் கில் ரூ.15 லட்சம் திட்டங்கள் நிலை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner