எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மே, 15 மத்திய அரசு மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், மும்பையை அடுத் துள்ள ராய்கட் மாவட்டத்தின் கர்ஜத் நகரில் ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. இக் கூட்டத்தில், நாட்டின் சமூக-பொருளாதார, அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களைச் சந்தித்த கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்விடைந்து விட்டது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. தேர்த லுக்கு முன் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுவற்குப் பதி லாக, வார்த்தை அலங்காரத்தால் பேசுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வேலையின்மையால் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பதற்றம் உருவாகியுள்ளது. 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதி என்னவானது? நாட்டின் பொருளாதாரம் மோச மான நிலையில் உள்ளது. விவ சாயிகளின் தற்கொலை அதிக ரிப்பால், விவசாயத் துறை கடுமையான நெருக்கடியில் உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் கடன்களை ரத்து செய்யும் மத் திய அரசால், விவசாயிகளின் கடன்களை ஏன் ரத்து செய்ய முடியவில்லை?

மத்திய அரசை வெளியே இருந்து அதிகாரம் செலுத்தும் அமைப்பாக, ஆர்எஸ்எஸ் உள் ளது. சங் பரிவார அமைப்பின் அனைத்து குழுக்களும் சட் டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, தேசியம் என்ற பெயரில் தலித் சமூகத் தினர், ஆதிவாசி சமூகத்தினர், சிறுபான்மையினர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி வரு கின்றன.

காஷ்மீர் பிரச்னைக்கு அரசி யல் தீர்வு காணப்பட வேண் டும். இந்தப் பிரச்னையை மோடி தலைமையிலான மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை. காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்து தரப்பின ரையும் மத்திய அரசு ஒன்றி ணைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர் தலைப் பொருத்தவரை, ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி வேட்பாளர் நிறுத் தப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, இதுவரை யாருடைய பெயரை யும் நாங்கள் பரிசீலிக்கவில்லை என்றார் டி.ராஜா.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner