எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 17 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25- ஆம் தேதி முடி கிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில், பொது வேட்பாளரை களமிறக்குவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். அந்த வகையில் அவர் அய்க்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டவர்களை அழைத்துப் பேசி உள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று (மே 16) சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதித்தனர். அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார் இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

அதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போதுஅவர்கூறும்போது,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினேன். குடியரசுத் தலைவர் தேர்த லில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எங்கள் பேச்சு அமைந்தது. அதே நேரத்தில் வேட்பாளராக யாருடைய பெயரையும் நாங்கள் விவாதிக்கவில்லை என கூறினார்.

மேலும், நிறைய அரசியல் சமன் பாடுகள் உள்ளன. நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். நாங்கள் ஒன் றாக விவாதிப்போம். நாட்டுக்காக உழைக்கக்கூடிய ஒருவரை பொதுவான வேட்பாளராக தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்போம். அவர் நாட்டுக்கு சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner