எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஹர்கோபிந்த்நகர், மே 20 சகரன் பூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண் டித்து, பஞ்சாப் அம்பேத்கர் சேனா மற்றும் அம்பேத்கர் மூல் நிவாசி அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல்வர் சாமியார் ஆதித்ய நாத்தின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.

பஞ்சாப், ஹர்கோபிந்த்நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்கா அருகிலிருந்து பஞ்சாப் அம்பேத்கர் சேனா  அமைப்பின் தலைவர் ஹர்பஜன் சுமன் தலை மையில் சகரன்பூர் வன்முறை யைக் கண்டித்து ஊர்வலம் நடை பெற்றது. கண்டன ஊர்வலம்  தேசிய நெடுஞ்சாலைப்பகுதியை நெருங்கிய போது, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தின் உருவ பொம்மை கொளுத்தப் பட்டது.

கண்டன ஊர்வலத்தின் முடி வில் வட்டாட்சியர் பல்பீர் ராஜ் சிங்கிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.  அக்கோரிக்கை மனு வில் சகரன்பூர் வன்முறை நிகழ்வு தொடர்பாக குடியரசுத தலைவர் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.
கண்டன ஊர்வலம் நெடுகி லும் பாஜகவுக்கு எதிரான முழக் கங்கள், சாமியார் ஆதித்யநாத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

இதுகுறித்து பஞ்சாப் அம் பேத்கர் சேனா  அமைப்பின் தலைவர் ஹர்பஜன் சுமன் கூறிய தாவது: மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்தே தாழ்த்தப்பட்டவர்கள்மீதான வன்முறைகள் அதிகரித்த வண் ணம் உள்ளன. பாஜகவினரும், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்தும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.  
குறிப்பாக உத்தரப்பிரதேசம், அரியானா, மற்றும் குஜராத் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

காவல்துறையினரோ சாமியார் ஆதித்யநாத் அரசால் ஆட்டு விக்கப்படுகின்ற பொம்மைகளாக இருக்கிறார்கள்.  சகரன்பூரில் தாழ்த்தப்பட்ட வர்கள் வசிக்கின்ற சுமார் 40 வீடுகளில் நுழைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய போது, காவல்துறையினர் வேறு திசையில் தங்களின் கவனத்தை திருப்பிக்கொண்டனர்.

சமூக செயற்பாட்டாளர்கள், பீம் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தாழ்த்தப்பட்டவர் களுக்கு உதவிட முன்வந்தார்கள். அப்படி உதவ வந்தவர்கள்மீது  காவல்துறை பொய்யான வழக்கு களைப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பிவிட்டது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள்குறித்து முறையாக ஆய்வு செய்யப்படுவ தில்லை. பஞ்சாப் அம்பேத்கர் சேனா மூல் நிவாசி அமைப்பு மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளது என்று ஹர்பஜன் சுமன் பேசினார்.

கவுன்சிலர்கள் பூர்ணிமா சுமன், சந்தீப் ஆகியோரும் போ ராட்டக்காரர்கள் மத்தியில் கண் டன நிகழ்த்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர் சுரீந்தர் தண்டா உள்பட பலரும் சகரன்பூர் நிகழ்வினை கடுமையாக கண்டித் துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner