எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லக்னோ, மே 22 பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக, லக்னோ நீதிமன்றத்தில் சர ணடைந்த, அய்ந்து பேருக்கும், சி.பி.அய்., சிறப்பு நீதிமன்றம்  பிணை அளித்தது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான, பா.ஜ.க., ஆட்சி அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், பாபர் மசூதி, 1992 இல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ.க., மூத்த தலைவர்கள், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது சதி திட்டம் தீட்டியதாக ரேபரேலி நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. மசூதியை இடித்ததாக, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது, லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது.

இந்த நிலையில், வழக்கிலிருந்து, அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டதை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், ரேபரேலி மற்றும் லக்னோ நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளை, ஒருங்கிணைந்து, லக்னோ நீதிமன்றத்தில் நடத்த வேண்டும்; தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட் டப்பட்ட, வி.எச்.பி., எனப்படும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி, 59, மகந்த் நிருத்ய கோபால் தாஸ், 79, மகந்த் தரம்தாஸ், 68, சம்பட் ராய் பன்சால், 71, மற்றும் பைகுந்த் லால் சர்மா, 88, ஆகியோர் நேற்று முன்தினம் (மே 20 இல்) லக்னோ நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மற்றொரு குற்ற வாளியான, சிவசேனா மூத்த தலைவ ரான சதீஷ் பிரதான், உடல்நலக் குறைவால் ஆஜ ராகவில்லை. வரும், 24 இல் ஆஜராக உள்ளார்.

பா.ஜ.க., மூத்த தலைவர்கள், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் எப்போது ஆஜராக வேண்டும் என்பது குறித்து வரும் வாரத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner