எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூர், மே 23 கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடி யூரப்பா மீது தீண்டாமையை கடைபிடிப்பதாக தாழ்த்தப் பட்ட இளைஞர் ஒருவர் மாண் டியா மாவட்ட காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் தமது புகாரில், சித் ரதுர்கா மாவட்டம் கேலகோடே பகுதியில் உள்ள ஒரு தாழ்த் தப்பட்ட குடும்பத்திற்கு எடி யூரப்பா வருகை தந்திருந்தார். அப்போது ஊடகங்கள் முன் னிலையில் தலித் குடும்பத் துடன் மதிய உணவு அருந் தினார். எடியூரப்பா அருந்திய உணவு தாழ்த்தப்பட்ட குடும் பத்தினரால் தயார் செய்தது அல்ல. ஹோட்டலில் இருந்து வாங்கி வந்தது. பா.ஜ.க. தலை வரின் இந்த செயல் சமூகத்திற்கு தவறான முன் உதாரணத்தை அளித்துவிடும் என்று குறிப் பிட்டு இருந்தார்.

எடியூரப்பா மீதான இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசிய லில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எடியூரப்பாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் எடியூரப்பா மீதான குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் உந்துதல் காரணமாக எழுப்பப்பட்டுள்ளது என்று கர்நாடக பா.ஜ.க. தெரிவித் துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் அய்க்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களது பலத்தை இழந்து வரும் நிலை யில் அதனை ஈடுகட்டுவதற்கு இது போன்ற கற்பனை குற்றச் சாட்டுகளை உருவாக்கப்பட் டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner