எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பிரபல வழக்குரைஞர் கபில் சிபிலுடன் ஒரு நேர்காணல்

செய்தியானர் : கடந்த 3 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட எதிர்கட்சி அரசியல்வாதிகள் மீது மத்திய புலனாய்வுத் துறை, மத்திய வருமான வரித் துறை அமலாக் கப் பிரிவுகளின் தாக்குதல் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதனை பழிவாங்கும் செயலாகக் கருதுகிறீர்களா?

கபில்சிபல் :  அது போல குற்றம் சாட்ட நான் விரும்ப வில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமானது. 2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு,காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது மட்டுமல்ல, அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும்,  குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர்.  ஆம் ஆத்மி கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் டில்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது முதற் கொண்டு, அவர்களது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவது அன்றாட வாடிக்கையாகவே ஆகிவிட்டது. டில்லி மாநில அரசு செயல்பட இயலாமல் உள்ள நிலையில், அதன் தலைவர்கள் மீது செயல்படமுடியாதபடி தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு உறுதிப் படுத்திக் கொண்டது.

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், சாரதா ஊழல் மற்றும் பல விவகாரங்களில் திரிணாமூல் காங்கிரஸ் தலை வர்கள் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். மம்தா பானர்ஜி உறுதியாக நின்றதும், இத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தன. பா.ஜ.க. மத்திய அரசினை மம்தா எதிர்க்கத் தொடங்கிய உடன், மீண்டும் இத்தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இதே போலத்தான் லாலுபிரசாத் யாதவ் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

அசோகியேடட் பத்திரிகை அறக்கட்டளை தொடர்பாக காங்கிரஸ் தலைமையின் மீதும் பா.ஜ.க. அரசு தாக்குதல் நடத்தியது. இப்போது ப.சிதம்பரம் மீது தாக்குதல் நடத்தப் படுகிறது. அரியானா மாநில முன்னால் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா மீது தாக்குதல் நடத்திய அவர்கள்,  இப்போது 90 வயதான மோதிலால் வோரா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். இமாசலப் பிரதேச முதல்வர் மீது, எந்த விதக் காரணமும் இல்லாமல் டில்லியில் மத்தி புலனாய்வுத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

ஜகன் மோகன் ரெட்டியும் கூட அவர்களது தாக்குதல் பட்டியலில் உள்ளார். ஆனால், குடியரசுத் தலைவர் தேர் தலில் அவரது ஆதரவு பா.ஜ.க.வுக்குத் தேவை என்பதால், தற்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர். இவற்றில் இருந்து எதிர்கட்சிகள் மீது பா.ஜ.க. ஒரு திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருவது தெளிவாகத் தெரிகிறது.

செய்தியாளர் : ஆனால், சோதனை நிறுவனங்கள் தங்க ளது கடமைகளை செய்து வருவதாகவும்,  காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் செய்த தவறுகள் வெளி வருவ தாகவும் பா.ஜ.க. கூறியிருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

கபில்சிபில் : அது போலவே அவர்கள் கூறுவது சகஜமா னதே. அவ்வாறு தவறுகள் நடந்திருந்தால், அவை நீதிமன்ற விசாரணையின் மூலம் வெளியே கொண்டு வரப்படலாம்.  இவற்றை விட மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில அரசுகள் மீது உள்ளன என்பது அவர்களுக்கும் தெரியும்; என்றாலும் அது பற்றி எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. வியாபம் ஊழல் வழக்கில், ஆவணச் சான்றுகளையோ அவர்களுக்கு நாங் கள் அளித்துள்ளோம். மத்திய அமைச்சர்கள் செய்து தவறு களை எல்லாம் நாங்கள் அறிவோம். அவர்களது பெயர்க ளைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. இவை பற்றி நாடாளு மன்றத்திலும், ஊடகங்களிலும் ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டி இருக்கிறது. குற்றங்களுக்காகத் தண்டிக் கப்பட்டவர்களும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். எதிர்கட்சி தலைவர்கள் விஷயத்தில் அவர்கள் கடை பிடிக்கும் அளவு கோலை அவர்களது அமைச்சர்கள் மீதே பயன் படுத்தினால், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய புலனாய்வுத் துறையின் வலையில் சிக்கிக் கொள்வார்கள்.

செய்தியாளர் : மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அம லாக்கப் பிரிவு அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கை களினால், நாட்டு மக்கள் அவை மீது வைத்துள்ள நம்பகத் தன்மையை அவை இழந்துவிடுமா?

கபில்சிபில்: அதில் சந்தேகமே இல்லை. அய்க்கிய ஜன நாயக முன்னணி ஆட்சியின் போது மத்தியப் புலனாய்வுத் துறையை ஒரு கூண்டுக்கிளி என்று பா.ஜ.க.வினர் கூறினர். நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு  அவர்களது செயல்பாடுகள் இடையூறாக உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை இந்த அரசின் நீண்ட கைகளாக ஆகிவிட்டது. நாங்கள் கேட்பது போல நீங்கள் அறிக்கை கொடுக்கவேண்டும் என்று மக்களை புலனாய்வுத் துறை அச்சுறுத்தத் தொடங்கி யுள்ளது என்ற செய்திகள் வெளிவந்து கொண்டு இருக் கின்றன. கருப்புப் பணத்தை மாற்றுவதற்கான தடை சட்டப் பிரிவுகளையும் பா.ஜ.க. அரசுக்கு சாதகமாக இந்த நிறுவனங் கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. குற்றச்சாட்டு மெய்ப் பிக்கப் படவில்லை என்றாலும்,  கருப்புப் பணத்தை மாற்று வதற்கான தடை சட்டப் பிரிவின் கீழ் அமலாக்கத் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யாத நிலையிலும், சொத்துகள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையிலும் கூட,  அமலாக்கத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அடிப்படையில்,  புலனாய்வுத் துறை அதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் பதிவு செய்யும். மத்திய புலனாய்வுத் துறை இந்த அளவுக்கு ஆளும் கட்சியினால் தவறாகப் பயன்படுத்தப்படுவது பெரிய இழப்புக் கேடைய மாகும்.

செய்தியாளர் : உங்கள் கருத்தின்படி அரசியல் பழிவாங் கலுக்காகவே அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய நடவடிக் கைகளை எதிர்கொள்வதற்கான வழிதான் என்ன?

கபில்சிபில்: அரசின் இத்தகைய தாக்குதல்களை இரு வழிகளில் நாம் எதிர்கொள்ள வேண்டும். சட்ட பூர்வமான நடவடிக்கை என்பது ஒரு வழி. நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்து, தாக்குதலுக்கு உள்ளான பல தலைவர்களுக்கு ஆதரவாக போதுமான சாட்சியங்கள் அளிக்க வேண்டும். இது தவிர வேறொரு அரசியல் திட்டமும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளும் பா.ஜ.க. மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர முன்வரவேண்டும்.

செய்தியாளர் : எதிர் கட்சிகளின் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு இதர எதிர்கட்சிகளை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளதா?

கபில் சிபில்: எதிர்கட்சித் தலைவர்கள் தாக்கப்படுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்க முடியாது. அதற்கு ஓர் அகண்ட அளவிலான பொதுவான செயல்திட்டங்கள் வேண்டும். எதிர்கட்சித் தலைவர்களின் மனங்கள் ஒன்றுபடவேண்டும். மக்களாட்சி சீரழிந்து வருதையும், காலில் போட்டு மிதிக்கப்படுவதையும இன்று நாம் கண்டு வருகிறோம். நமக்கு பழக்கமான அதே அரசு நடவடிக்கைகள்தான் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுகள் ஒரு தலை சார் பானவையாக ஆகிவிடுகின்றன. பத்திரிகை மற்றும் மின்ன ணுவியல் ஊடகங்களும் அரசினால் கட்டுப் படுத்தப்பட்டு வருகின்றன. களத்தில் என்னதான் நடக்கிறது என்ற உண்மைகள் வெளிவருவதில்லை. இந்த அரசுக்கு எதிராக ஓர் அகண்ட வரிசையிலான எதிர்ப்பு உணர்வு உருவாவது மிகமிக அவசியமாகும்.

செய்தியாளர் : மோடி அரசு பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில்,  இந்த மூன்றாண்டு கால ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கபில்சிபில்: இந்த அரசு ஏதோ பெரிய அளவில் சாதனை கள் புரிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும்போது,  களநிலையில் மேற்கொள்ளப்பட்ட எந்த பெரிய அளவிலான சாதனைகளையும் என்னால் பார்க்க முடியவில்லை. பொருளாதாரத் துறையில் ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் (ஜி.டி.பி.)  7 சதவிகித அளவில் வளர்ந்து வருவதாகக் கூறப் படுகிறது. வேலை வாய்ப்பு வளர்ச்சியை நீங்கள் பார்த்தால் 1 சதவிகித அளவில் மட்டுமே அது வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் வளர்ச்சியுடன் எதிரொலித்திருப்பதை என்னால் காணமுடிய வில்லை. அவர்களது அயல்நாட்டுக் கொள்கைகளோ பலமற்றதாக உள்ளன என்பதுடன்,  சீனா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற எந்த அண்டை நாட்டுடனும் சுமுகமான உறவு இருப்பதாகவும் தெரியவில்லை.  சமூக அளவில்,  நாட்டில் முன் எப்போதுமே கண்டிதராத அளவிலான வன்முறைகளை நாம் கண்டுவருகிறோம். சுகாதார, மருத்துவ துறையில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை. கணினி பயன்பாட்டில் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; ஆனால் அதுவும் மேல்தட்டு சமூக மக்களுக்கு மட்டுமே பயன் படுவதாக இருக்கிறது.

விவசாயத் துறையில் பெரிய அளவிலான அழுத்தம் இருக்கிறது. இதனை அரசுக்கு நாம் சுட்டிக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். தொழில்துறையிலும் பெருமைபடத்தக்க முன்னேற்றங்கள் எவையும்  ஏற்பட்டுவிடவில்லை. அரசின் உறுதியான கொள்கைகள் இன்மையால், உற்பத்தி மற்றும் தயாரிப்புத் துறைகள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகி யுள்ளன. பெரிய அளவிலான விளம்பரமும், கூச்சலும்தான் இருக்கின்றனவே அன்றி, களநிலை செயல்பாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

செய்தியாளர் : பா.ஜ.க. எப்போதும் இல்லாத அளவில் அதிக அதிகாரம் பெற்றதாக உள்ளது.  பொதுத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. காங் கிரஸ் கட்சி இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

கபில்சிபில்:  சப்கா சாத், சப்பா விகாஸ் போன்ற ஒரு சூழலை, அனைத்து நிறுவனங்களையும் பயன்படுத்தி நரேந்திர மோடி உருவாக்கியிருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  ஊடகத்தில் அதிக அளவு பரப்புரை செய்யப்பட்டு வருவதால், கண்ணுக்குத் தெரியாமல் இருக் கும் பா.ஜ.க. அரசின் தவறுகளை மக்களின் முன் சென்று காங்கிரஸ்  வெளிப்படுத்தும். அத்துடன் மத்தியில் பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதற்கு ஓர் அகண்ட அளவிலான எதிர் கட்சிகளின் ஒற்றுமையையும் நாம் தோற்றுவிக்க வேண்டும்.

செய்தியாளர் : எந்த ஒரு அரசுக்கும் கடினமான செய லாக இருக்கும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக  கடந்த மூன்று ஆண்டுகளில் எழுந்துள்ள  சவால்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கபில்சிபில் :  நக்சல் வன்முறையைப் பாருங்கள்.  சுக்மா வில் என்ன நடந்தது? காஷ்மீரில் என்னதான நடந்து கொண் டிருக்கிறது என்பது அனைவரும் காணும்படியாகவே உள்ளது. இந்த ஆட்சியில் நிகழ்ந்த 172 தீவிரவாதத் தாக்குதல் களையும், 1343 எல்லைக் கோட்டு அத்துமீறல்களையும் சற்று பாருங்கள். நாட்டின் வடகிழக்கு பகுதியில் 344 மக்களும், 99 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். நக்சல்பாரி தொடர்பான செயல்பாடுகளில் 278 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இது போல இன்னமும் கூறிக் கொண்டே செல்ல என்னால் முடியும். ஆனால், அரசு செயல்பட வேண் டும், அதுவும் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நன்றி: தி டெக்கான் கிரானிகிள் 21-05-2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner