எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி, மே 30-- கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரி யிலும் மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுவை சட்டப் பேர வையில் திங்களன்று (மே 29) கேள்வி நேரம் முடிந்ததும் மத்திய அரசு கொண்டு வந் துள்ள மாட்டு இறைச்சி விற்பனை தடை சட்டம் தொடர்பாக அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசும் போது, நாடு முழுவதும் மாட்டு இறைச்சி விற்பனை, தோலுக்காக விலங்குகளை கொல்வது போன்றவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுவை யில் ஏராளமான மக்கள் மாட்டு இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும் தோல் தொழிலும் பிரதா னமாக உள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலில் ஈடு பட்டுள்ளனர்.

எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை புதுவையில் அமல்படுத்தக் கூடாது. இதற்கு முதலமைச்சர் உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார். திமுக உறுப் பினர் சிவா, என்.ஆர். காங்கிரஸ் உறுப் பினர் அசோக் ஆனந்து ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் நாராயணசாமி,புதுவை பிரெஞ்சு கலாச்சாரத்தை கொண்ட மாநிலம். இங்கு பெரும்பாலான மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. மேலும் தோல் தொழி லிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசின் தடை சட்டத்தை நிச்சயம் அமல்படுத்த மாட்டோம். இந்த சட்டத் துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ளன.அதேபோல் புதுவையிலும் மத்திய அரசு தன் னிச்சையாக கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல் படுத்தமாட்டோம். தேவைப்பட்டால் புதுவையில் மாட்டு இறைச்சி விற் பனையை தொடர தனிச் சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும். இது சம்பந்தமாக பிரத மருக்கு உடனடியாக கடிதம் அனுப்பப்படும் என்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மாட்டு இறைச் சிக்கான தடை மத்திய அரசின் சர்வாதிகார போக்காகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

மாடு, எருது, ஒட்டகங்களை சாப்பிடக் கூடாதென அறி விக்கும் பாஜக, அடுத்து ஆடு, மீனையும் சாப்பிடக்கூடாது என்றும் அறிவிக்கும்.முடிவாக பட்டினி கிடந்தால் பொரு ளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறுவார்கள் என்றார். எந்த உணவு சாப்பிடுவது, எந்த மதத்தை பின் பற்றுவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத் தில் கூறப்பட்டுள்ள தனி மனித சுதந்திரம் ஆகும்.இதை மத்திய அரசு பறிக் கக்கூடாது என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner