எழுத்துரு அளவு Larger Font Smaller Font


 

கொல்கத்தா, மே 30- இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்ள முடி யாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங் கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி, செய்தி யாளர்களிடம் கொல்கத்தாவில் திங்கள்கிழமை (மே 29) கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்திருப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை. இது முழுக்க, முழுக்க ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் முரணான செயல்பாடு. நாட்டின் கூட்டாட்சி கொள்கையை அழித்தொழிக்கும் முயற்சியாகவே இதைக் கருதத் தோன்றுகிறது. இந்த முடிவை மேற்கு வங்க அரசு ஏற்காது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதுதொடர்பாக மாநில அரசு தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். மாநிலங்களின் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner