எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 31- ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்தகங்களையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துஉணவகங் களையும் மூடி, அதன் உரிமை யாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட் ட னர். வேலூர் மாவட்டம் முழு வதும் 85 சதவீதமருந்தகங்களும், 85 சதவீதம் உணவகங்களும் வேலைநிறுத்தம் காரணமாக அடைக்கப்பட்டிருந்தன. தனி யார் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மட் டுமே இயங்கின.இதேபோல் சிறிய உணவகங்கள் கூட செயல்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் 90 சதவீத உணவகங்கள் மூடப் பட்டிருந்தன. பெரும்பாலான மருந்தகங்கள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூடப்பட்டன.

மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் வழக் கம்போல் செயல்பட்டன.நாமக் கல் மாவட்டம் முழுவதும் 95 சதவீத மருந்தகங்கள் அடைக் கப்பட்டன. 80 சதவீத உண வகங்களை அடைத்துஅவற்றின் உரிமையாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீத மருந்தகங்கள் மூடப்பட்டன. இதேபோல், மாவட்டத்தில் 100 சதவீத சிறிய மற்றும் பெரியளவிலான உணவகங்கள் மூடப்பட்டன.

ஈரோடு மாவட்டம் முழு வதும் 100 சதவீதமருந்தகங்கள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் உட்பட 80 சதவீத உணவகங்கள் மூடப் பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணா மலை, ஆரணி, போளூர் உள் ளிட்ட பகுதிகளில், 83 சதவீத மருந்தகங்கள் அடைக்கப்பட் டன. இதேபோல், ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் 71 சதவீத உணவகங்கள் அடைக் கப்பட்டன. தேனி மாவட்டத் தில், ஆன்லைன் மருந்துவிற் பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 90 சதவீத மருந்தகங்கள் மூடப் பட்டன.

இதேபோல், ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 80 சதவீத உணவகங்கள் மூடப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக் கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந் தாங்கி உள்ளிட்ட பகுதிகளில், 90 சதவீத சிறியமற்றும் பெரிய உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 90 சதவீத மருந்தகங்கள் அடைக் கப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95 சதவீத மருந் தகங்கள் மூடப்பட்டன. 95 சத வீத உணவகங்கள் மூடப்பட் டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner