எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிறீஹரிகோட்டா, ஜூன் 2 இஸ்ரோ முதல்முறையாக 3,136 கிலோ எடை கொண்ட ஜிசாட் -19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.

ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜூன் 5 -ஆம் தேதி மாலை 5.28 மணிக்கு இந்த செயற்கைக்கோள் சிறீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மய்யத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.

ஜிசாட் 19 செயற்கைக்கோள்: ஜிசாட் 19 தொலைத்தொடர்பு செயற்கைக்கோளாகும்.

தற்போதுள்ள ஜிசாட் செயற்கைகோள்களின் தகவல் பரிமாற்ற வேகம் நொடிக்கு ஒரு ஜிகாபைட்டாக உள்ளது. இது, வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இந்திய இணையதள சந்தைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. தற்போது ஜிசாட் -19 செயற்கைக்கோள் மூலம் நொடிக்கு 4 ஜிகாபைட் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும்.

இதைத் தொடர்ந்து ஜிசாட் -11 செயற்கைக்கோள் இந்த ஆண்டு இறுதியில் ஏவப்படும். அதன் மூலம் வினாடிக்கு 13 ஜிகாபைட் தகவல்களை மாற்றம் செய்ய இயலும்.

ஜிசாட் -20 செயற்கைக்கோள் 2018 -ஆம் ஆண்டில் ஏவப்படும். இந்த செயற்கைக்கோள் நொடிக்கு 60 முதல் 70 ஜிகாபைட் தகவல்களை அனுப்பும். இதன் மூலம் இந்தியாவில் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக இணையதள பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இணைய வேகத்தில் மற்ற உலக நாடுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாகவே ஜிசாட் -19 செயற்கைக்கோள் முதல்கட்டமாக ஏவப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி மாக் 3: ஜிசாட் -19 செயற்கைக்கோளை சுமந்து செல்லவுள்ள ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட்டின் உயரம் 43.3 மீட்டர்; சுற்றளவு 4 மீட்டர்; மொத்த எடை 640 டன்களாகும்.

இந்த ராக்கெட் மூன்று பாகங்களாக பிரிந்து செயற்கைக்கோளை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner