எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொல்கத்தா, ஜூன் 3 சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை (ஜிஎஸ்டி) தற்போதைய வடிவத்தில் மேற்கு வங்கம் ஆதரிக்காது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை உறுதி செய்யும் விதமாக ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஜிஎஸ்டி சட்டமானது அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேற்கு வங்க முதல் வர்மம்தா  தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற் றது. இதில் பங்கேற்று மம்தா பேசியதாவது:

ஜிஎஸ்டியின் கீழ் சில பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் ஏற்புடையதாக இல்லை. ஜிஎஸ்டியின் தற்போதைய வடிவமானது சமூ கத்தின் அனைத்து தரப்பினருக் கும் ஏற்றதாக இருக்காது. குறிப்பாக, அமைப்பு சாரா துறைக்கு இது பொருத்த மற்றதாக உள்ளது.

எனவே, ஜிஎஸ்டியை தற் போதைய வடிவத்தில் மேற்கு வங்க அரசு ஆதரிக்காது. இது தொடர்பாக மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதனை மத்திய அரசு பரிசீலித்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை யில் இருக்கும் சில குறை களைக் களைவதற்கு முன்வர வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா பேசுகையில், 'ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போதைய வடிவத்தில் அனு மதிக்கப்பட்டால் மேற்கு வங்கத்தின் பொருளாதார நிலையும், வேலைவாய்ப்பும் கடுமையாக பாதிக்கப்படும்' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner