எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மும்பை, ஜூன் 3 மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் நேற்று 2ஆ-வது நாளாக நீடித்தது. நாசிக் அருகே ஏற்பட்ட வன்முறையை தடுக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளு படி, விவசாயத்துக்கு இலவச மின் சாரம், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் நேற்று முன்தினம் காலவரையற்ற போராட் டத்தை தொடங்கினர்.

அன்றைய தினம் அகமத்நகர், அவுரங்காபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகளின் போராட் டத்தில் வன்முறை வெடித்தது.
குறிப்பாக அகமத்நகர் அருகே காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்றை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர். மேலும், அவுரங்காபாத்தில் விவசாயிகளுக்கும், பழ வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் நேற்று 2-ஆவது நாளாக நீடித்தது. விவசாயிகளின் சாலை மறி யல், வன்முறை உள்ளிட்ட காரணங் களால், நவிமும்பை சந்தைக்கு காய் கறிகள் ஏற்றி வரும் லாரிகளின் எண் ணிக்கை நேற்று கணிசமாக குறைந்தது.

ஊரடங்கு உத்தரவு

முன்னதாக, நாசிக் அருகே உள்ள யோலே பகுதியில் விவசாயிகளின் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால், விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். இத னால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, யோலே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.

விவசாய அமைப்பு எச்சரிக்கை

இதனிடையே, உஸ்மனாபாத்தில் கிஷான் என்ற விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, இந்த போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றி விவாதிக்கப் பட்டது.

அதன்படி, வருகிற 5-ஆம் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) மாநில அரசிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால், அதற்கு அடுத்த நாட்களில் மாநிலம் முழுவதும் முழு கடைய டைப்புக்கு அழைப்பு விடுப்போம் என்றும், அதற்கு அடுத்த நாள் அரசு அலுவலகங்களுக்கு ஊர்வலமாக சென்று அதன்கதவை இழுத்து மூடி பூட்டுப்போடுவோம் என்றும், அதற்கு மறுநாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களின் வீடுகளுக்கு சென்று கதவை பூட்டுப்போட்டு, அவர்களது குடும்பத் தினரை சிறைப்பிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner