எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஜூன் 6 தேர்த லின்போது பாஜகவால் அளிக் கப்பட்ட வாக்குறுதிகளை செயல் படுத்துவதில் ஏற்பட்ட தோல் வியை மறைக்கவே, பாஜக மற்றும் அதன் சார்பு இந்துத்துவ அமைப்புகள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலான நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன என்று பிகார் மாநிலத்தின் முதல்வரும், அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ்குமார் கூறினார்.

பீகார் மாநிலம், பாட்னா வில் அவர் செய்தியாளர்களிடம்  கூறிய தாவது: ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக் கும் மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும். பாகிஸ் தான் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியப் பகுதியை மீட்ப தற்கும் திட்டம் வகுக்க வேண்டும்.

தேர்தலின்போது பாஜக வால் அளிக்கப்பட்ட வாக்குறு திகளை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியை மறைக் கவே, பாஜக மற்றும் அதன் சார்பு இந்துத்துவ அமைப்புகள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலான நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன.

உத்தரப் பிரதேச சாலைகளில் கைவிடப்பட்ட நிலையில் பசுக் களும், எருமைகளும் சுற்றி திரி கின்றன. இந்த கால் நடைகளுக்கு, பாதுகாப்பான தங்குமிடங்கள் அமைத்து தருவதற்கு, பாஜக வினரும், இந்துத்துவா அமைப் புகளும் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாட்டி லேயே பிளாஸ்டிக் பொருட்களை தின்பதால் பசுக்களால் அதிகள வில் உயிரிழக்கும் மாநிலமாக உத்தரப் பிரதேசம்தான் உள்ளது.

சட்டவிரோத இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக பாஜக தற்போது தான் பேசி வருகிறது. ஆனால், பிகாரில் கடந்த 1950-ஆம் ஆண்டி லேயே சட்டவிரோத இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதிப்பது தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. அப்போது பாஜக எனும் கட்சியே, அரசி யலில் கிடையாது. பிகார் மாநி லம், பாட்னாவில் பசுக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தங்குமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விட்டுள்ளேன். அது விரைவில் திறக்கப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

திமுக தலைவர் கலைஞ ருக்கு மரியாதை அளிக்கும் வகையிலேயே சென்னைக்கு 3ஆம் தேதி சென்றேன். குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் விவ காரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பணியே ஆகும். ஒருவேளை அதில் அவர்கள் தோல்வியடைந் தால், எதிர்க்கட்சிகள் சார்பில் தனியாக வேட்பாளர் நிறுத்தப் படுவார்.  பீகாரில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளும் முதலாவதாக வந்தவர்கள் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதை சவாலாக எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் தேர் வுகளை நேர்மையாக நடத்து வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் நிதீஷ்குமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner