எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 9 உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தை வழி மறித்து, எதிராக  முழக்கங்களை முழங்கி லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 7.6.2017 அன்று மாலை உத்தரப் பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் வாகனம் பாதுகாப்பு வாகனங்களுடன் லக்னோ பல்கலைக்கழகத்துக்கு முன் பாக சென்று கொண்டிருந்தபோது மாண வர்களின்முற்றுகைக்குஉள்ளானது.அவ்வழியேசென்றவாகனங்களைவழி மறித்து சாலைமறியல் செய்து  பாது காப்பு வாகனங்களை நிறுத்தி, முதல் வர் வாகனத்தை முற்றுகையிட்ட மாண வர்கள்  தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முசுலீம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து முழக்கமிட்டார்கள்.

சமாஜ்வாடி, இடது சாரி மாணவர்கள் ஒன்றிணைந்து உத்தரப்பிரதேச முதல்வர் வாகனத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

இடதுசாரிமாணவர்பிரிவானஅனைத் திந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாணவர் பிரி வான சமாஜ்வாடி சத்ர சபா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களில் 4 மாணவிகள் உள்பட 14 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சகரன்பூர் பகுதியில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு வார கால தொடர்ச்சியான ஜாதிய வன் முறை களைக்கண்டித்தும், இளைஞர்களுககு வேலைவாய்ப்பை அளிப்பதில் தோல்வி கண்டுள்ள அரசைக்கண்டித்தும் மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

மாணவர்கள் போராடுகின்ற காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டுள்ளது. அக் காட்சிப்பதிவில் யோகி அரசு ஒழிக எனும் முழக்கத்தை மாணவர்கள் ஆவேசத்துடன் எழுப்பியுள்ளார்கள். மேலும் மாணவர்களில் சிலர் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்டி  எதிர்த்துள்ளார்கள்.

பாஜகவின் திட்டங்களை விளக்கிட பல்கலைக்கழகத்தின் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமாஜ்வாடி கட்சியின் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரிமாணவர்போராட்டம்குறித்துகூறும் போது,“மாணவர்கள்அறவழியில்வன் முறைக்கிடமில்லாமல் அமைதியாக போராட்டத்தை நடத்தி, பல்கலைக்கழ கத்தின் செலவிலேயே உத்தரப்பிரதேச மாநில முதல்வரின் கவனத்தை ஈர்த்துள் ளார்கள்’’ என்றார்.

மாணவர்களின் போராட்டத்தையடுத்து உத்தரப்பிரதேச மாநில முதல்வருக்கு அளிக் கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் ஏற் பட்டதாகக் குறிப்பிட்டு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆறு காவலர்கள் என ஏழு பேரை உத்தரப்பிரதேச மாநில அரசு பணியிடைநீக்கம் செய்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner