எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 9 கருநாடக மாநில காங்கிரசில்  இளைஞர் பிரிவினர் பொறுப் பேற்கும் விழாவில் கலந்து கொண்டு கருநாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது, இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனை செய்வதற்கு தடை போடுகின்ற மத்திய அரசின் செயல்பாடானது அரசமைப் புச்சட்டம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரானதாகும்.

பசு வதை என்பது மாநில பட்டியலின்கீழ் வருவதாகும். எந்த உணவை உண்பது என்ப தும், நான் எந்த உடையை உண்ண வேண்டும் என்பதும் என்னுடைய உரிமையாகும். இந்த உரிமைகளைப்பறிப்பது அரசமைப்புச்சட்டத்துக்கு எதி ரானதாகும்.

எவ்விதத்திலும் பயன் தராத முதுமையடைந்த கால் நடைகள் விவசாயிகளுக்கு சுமையானவையாகும். அப்படி எவ்விதத்திலும் பயன்படாத கால்நடைகளுக்கு குறைந்த பட்சம் நாள் ஒன் றுக்கு 10 கிலோ தீவனம் அளிக்க வேண்டியிருக்கும். இது விவசாயிகளின் பொருளா தார நிலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மத்திய அரசின் நடவடிக்கை விவசாயத்துறையையே பாதிக்கச் செய்துவிடும். இது குறித்து மத்திய அரசு கவனத் தில் கொள்ளவில்லை.

நாம் இந்துக்களாக இல் லையா? முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்கள் இந்துஸ்தானி களாக இல்லையா? அப்பாவி மக்கள்மீது வெறிகொண்டு தாக்கப்படுகின்ற தன்மையில் பாஜக மக்களை தவறாக வழிநடத்திவருகிறது.

எல்லாவற்றிலும் வளர்ச்சி குறித்து பேசிவருகின்ற பாஜக, முசுலீம்கள், கிறித்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர் களை விரட்டிக்கொண்டு இருக் கிறது. மோடியின் தவறாக வழிநடத்துகின்ற பேச்சை அப்படியே இளைஞர்கள் ஏற்றுக்கொண்டு அதன்படி  நடக்க முடியாது’’ என்று கரு நாடக முதல்வர் சித்தராமையா பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner