எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஜூன் 9 உத்தரப்பிரதேசத்தில் சமீபத் தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகி யவை பெரிய கட்சிகளாக உள்ளன. காங்கிரசும் ஓரளவு செல்வாக்குடன் திகழ்கிறது.

சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், காங்கி ரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் 3 அணிகள் களத்தில் நின்ற நிலையில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக சமாஜ் வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந் தால் பாரதிய ஜனதா வால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அடுத்து நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இதே போல் கூட்டணியை உருவாக்கி பாரதிய ஜனதா வின் வெற்றியை தடுக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் முயற்சித்து வருகிறார். இதற்காக சமாஜ் வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கைகோர்க்க வேண்டும் என்று அவர் விரும் புகிறார். இதற்காக 2 தலைவர் களுடனும் அவர் தொலை பேசியில் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் அசோக் சிங் இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் கூறும் போது, அகி லேஷ் மற்றும் மாயாவதியுடன் லல்லுபிரசாத் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். மேலும் முலாயம்சிங்கையும் சமா தானப்படுத்தி வருகிறார் என்றும் கூறினார்.

லல்லுபிரசாத் யாதவ் அடுத்த மாதம் 27-ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக பாட்னாவில் பிரமாண்ட கூட் டத்தை நடத்துகிறார். இதில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வருகிறார்.

அந்த கூட்டத்தில் முலா யம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோ ரையும் பங்கேற்க வைப்ப தற்கு அவர் முயற்சிக்கிறார். அப்படி பங்கேற்றால் அவர் களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படும். எனவே உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா வுக்கு எதிராக ஒரு வலுவான அணியை உருவாக்கி விட முடியும் என்று லல்லுபிரசாத் கருதுகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner