எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அய்தராபாத், ஜூன் 11 மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின்படி பசு எருமை, ஒட்டகம் போன்ற விலங் குகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ தடைபோடப்பட்டது.
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அய்தராபாத் உயர்நீதி மன்ற நீதிபதி தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகள் பசு வதைத் தடைச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.

நல்கொண்டா பகுதியைச் சேர்ந்தவரான ராம்வத் அனுமா என்பவர் 63 பசு மாடுகளையும், இரண்டு எருதுகளையும் பக்ரீத் விழாவிற்காக விவசாயிகளிட மிருந்து உரிய விலை கொடுத்து வாங் கினார். அவர் விலைகொடுத்து வாங்கிய கால்நடைகளைக் கொண்டு சென்றபோது, காஞ்சனபள்ளி பகுதியில் காவல்துறையினர் பறிமுதல் செய்து ராம்வத் அனுமாமீது வழக்கு பதிவு செய்தார்கள். கீழமை நீதிமன்றத்தின் உத்தரவின்படி பசுமாடுகள் மற்றும் எருதுகளை கோசா லைக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் பசுவதைத்தடை சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

காவல்துறையினர் பறிமுதல் செய்த கால்நடைகளை திருப்பி அளிக்க வேண் டும் என்று கோரி அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

கால்நடைகளைத் திருப்பி அளிக்குமாறு கோரும் மனுவை அளித்துள்ள மனுதாரரின் வழக்குரைஞர் கூறும்போது,  மத விழாவிற் காக கால்நடைகளை உயிர்ப்பலி கொடுக் கப்படுகிறதே ஒழிய இதில் வேறு எவ்வித குற்றமும் கிடையாது என்றார்.

பசு மாடு என்பது நாட்டின் புனிதமான தேசிய செல்வம் என்று கூறும் அய்தராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பி.சிவசங்கர ராவ் தெலங்கானா மற்றும ஆந்திரப்பிரதேச அரசுகள் பசு வதைத் தடைச் சட்டத்தை கடுமையாக்கி, பசு மாடு மற்றும் எருமைகள் மீதான வதையில் ஈடுபடு வோரை  பிணையில் வெளியில் விட முடியாத வகையில் பசு வதைத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று அவருடைய உத்தரவில் கூறி யுள்ளார்.

இந்த நாட்டில்  கடவுளுக்கு நிகராக, தாய்க்கு நிகராக கருதப்படுவது பசு. பசுவுக்கென்று புனிதம் உள்ளது. அணைத்துக்கொள்ளலாமே தவிர, அடிக்கக் கூடாது. பசு தேசிய புனித செல்வமாக இருக்கிறது. எவர் ஒருவரும் பசுவைக் கொல்லவோ, இறைச்சிக்காக அறுக்கவோ கூடாது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 102இன்படி, காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் எந்த பொருளாக இருந்தாலும், திருடப்பட்டதாகவோ, வேறு எந்த குற்ற நோக்கமுடையதாகவோ இருக்கலாம். பசுவும் எருதும் அந்த பொருள்கள் போன்றவையே. மத வழி பாட்டுக்காக உயிர்ப்பலி கொடுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் அசுதோஷ் லாகிரி வழக்கில் ஆரோக்கியமான எந்த ஒரு பசுவையும் பக்ரீத் பெயரால் கொல் வதற்கு முசுலீம்களுக்கு அடிப்படை உரிமை கிடையாது என்று தீர்ப்பானது என்று குறிப்பிட்ட அய்தராபாத் உயர்நீதி மன்ற நீதிபதி ராவ் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பின் தீர்ப்பில் தலையிட மறுத்து விட்டதுடன், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் செயலாளர் களுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 429ஆம் பிரிவை பிணைவழங்கப்பட முடியாத பிரிவாக திருத்தி, 1960ஆம் ஆண்டு விலங்குகள் துன்புறுததலை தடுக்கும் சட்டப் பிரிவு 11 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 429 அளிக்கும் தண்டனையை அளிக்கலாம் அல்லது 1977ஆம் ஆண்டு பசு வதை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 10இன்படியும் பசு அல்லது பிற விலங்கு களின்மீதான பாதுகாப்பை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது என்று நீதிபதி வழக்கு விசாணையின்போது குறிப்பிட்டார்.

மேல்முறையீட்டு வழக்கின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராவ் கூறும்போது, பசு, எருது அல்லது கன்று ஆரோக்கிய நிலை குறித்து கால்நடை மருத்துவர் அளிக்கின்ற அறிக்கையையொட்டி, பிணையில் விட முடியாத குற்றமாக கருத வேண்டும். பசு வதைத் தடை சட்டம் பிரிவு 10இல் திருத்தங்கள் செய்யப்ப¢ வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்ட நீதிபதி ராவ் வழக்கின்மீதான விசாரணையை 7.7.2017 தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பசு வதை தடை சட்டங்கள்

பாஜக-ஆர்.எஸ்.எஸ். சதி: சிபிஅய்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  சதா திவாங்கட் ரெட்டி “கூறும் போது, பசு வதை தடுப்பு சட்டங்கள் என்று சட்டங்கள் கொண்டுவருவது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-. சதியாகும். சிறுபான் மையர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கிட அவர்கள் முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.

மாவட்ட செயலாளர் ராம்கோபால் ரெட்டி கூறுகையில், பாஜக அரசு பசு வதைத் தடை என்கிறபெயரில் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை ஒடுக்குவதற்காக சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உணவுப் பழக்கத்தில் உள்ள சுதந்திரத்தை எவரும் பறிக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  உரிமைகளுக்காக போராடும். மத் திய குழுவின் உத்தரவின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காமன் கூட்டுச் சாலையில் போராட்டத்தை நடத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner