எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கவுகாத்தி,ஜூன் 11 மத்திய அரசின் மாட்டுக்கறித் தடையை எதிர்த்து நாடுமுழுவதும் இடதுசாரிகள், மதசார் பின்மையாளர்கள், இந்துத்தவா எதிர்ப் பாளர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, சிறுபான்மையினர், இளை ஞர்கள், மாணவர்கள் என  பலதரப்பிலும் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங் களில் பல்வேறு பகுதிகளில் மாட்டிறைச்சி விருந்து, மாட்டிறைச்சி திருவிழா என நடைபெற்று வருகிறது. மாட்டிறைச்சி விருந்து நடத்தினார் என்று கூறி சென்னை அய்அய்டியில் மாணவர் சூரஜ் என்பவரை ஏபிவிபி இந்துத்துவா வெறியர்கள் தாக்கினார்கள்.

பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் தனித்தீர்மானமே அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை முதல்வர் வி.நாராயணசாமி புதுவை மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை கிடையாது என்று தெளிவுபடுத்தி யுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளும் கோவாவில் மாட்டி றைச்சித்தடை என்கிற பேச்சுக்கே இட மில்லை என்று அம்மாநிலத்தவர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் மாட்டி றைச்சிக்கு விதிக்கப்படுகின்ற தடையை எதிர்த்து, மேகாலாயா மாநிலத்தில் கேரோ மலைப்பகுதியில் துரா எனுமிடத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சித் திருவிழாவை நடத்தியுள்ளார்கள்.

பழைய சோறும் மாட்டுக்கறியும்

பழைய சோறும்- மாட்டுக்கறியும்Õ என்கிற வகையில்  வடகிழக்கு மாநிலத்தின் பாரம்பர்ய உணவைப்போற்றும் விதத்தில் பாஜகவைச்சேர்ந்த பொறுப்பாளர்களே இவ் விருந்தினை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்கள்.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்குத் தடைபோடும் முடிவை கண்டித்து பாஜக வினர் உள்பட 5000  பேர் அவ்விருந்தில் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இத்திருவிழாவில்  கலந்து கொண்ட பாஜகவினர் கூறும் போது, எங்களின் தலைவர்களாக இருந்தாலும், எங்கள் பகுதிக்குள் நுழைந்து எங்களுக்கான சட்டங்களை மீறிவிட முடியாது என்கின்றனர்.

துரா பகுதி பாஜக தலைவர் பெர்னார்ட் கூறும்போது, பழைய சோறும் மாட்டுக் கறியும் விழா மூலமாக கேரோ மலைப் பகுதிவாழ் மக்கள், தலைவர்கள்  தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். எங்களுக்கு என தனியே சட்டம், கலாச்சாரம், பாரம் பரியங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன. ஆகவே, சட்டங்களைப்போட்டு தாழ்த்தப் பட்ட மக்களிடையே கட்டாயப்படுத்து கின்ற செயலை மத்திய அரசு செயல் படுத்திட முடியாது’’ என்றார். மாட்டி றைச்சித் திருவிழாவைத் தொடர்ந்து பெர்னார்ட் பாஜக விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner