எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கட்டங்கி, ஜூன் 11 பருவநிலை மாற்றத்தால் கடற்கரையை ஒட்டி யுள்ள சென்னை, மும்பை, கொல் கத்தா போன்ற மாநகரங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் அபா யம் உள்ளதாக தேசிய வளி மண்டல ஆராய்ச்சி மய்யம் எச்சரித்துள்ளது.

சித்தூர் மாவட்டம், பாகாலா மண்டலம், கட்டங்கியில் உள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மய்ய இயக்குநர் ஜெயராம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தட்பவெப்பம்,  காற்றில் ஏற்படும் மாசு உள்ளிட்ட பருவ நிலை மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சியை நாங்கள் மேற் கொண்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சி முடிவுகள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் பருவநிலை மாற் றங்கள் குறித்தும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கவுஸ்பாஷா, வெங்கட்ரத்தினம் உள்ளிட்ட 8 பேர் குழு தயார்படுத்திய ஆய் வறிக்கை சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி இதழில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆய் வறிக்கையில் இதே நிலை நீடித்தால் 2050ஆம் ஆண்டில் பூமியின் வெப்பம் 2 டிகிரி அதிகரிக்கும். 2099ஆம் ஆண்டில் அது 5 டிகிரி அதிகரித்து பனி மலைகள் உருகி கடல் நீர்மட்டம் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டிய சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மாநகரங் களுக்கு  பெரும் ஆபத்து ஏற் படும். எனவே, இயற்கை சீற்றங் களை தடுக்க வனப்பகுதிகளை விரிவாக்க வேண்டும். நிலக்கரி பயன்பாட்டை குறைத்து சூரிய சக்தி போன்று இயற்கையான முறைகளை பின்பற்ற வேண்டும்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் மய்யத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்படும். மேலும், வரும் 26ஆம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம் இணைந்து பருவநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெகதீஷ் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கின்றனர். இதில் 10 சர்வதேச விஞ்ஞானி களும், 20 தேசிய விஞ்ஞானி களும், 150 அறிவியல் ஆராய்ச்சி யாளர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை மய்யம்

இயக்குநர் ஜெயராம் மேலும் கூறும்போது, ஆந்திர மாநிலத்தில் இடி தாக்குதலை முன்கூட்டியே கண்டறிவதற்காக இஸ்ரோ, மாநில அரசு, தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மய்யம் ஆகியவை இணைந்து அமராவதியில் வானிலை ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளது. இங்கு இடி தாக்குதல் குறித்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கண்ட றியப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.  இதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடி யும்’’ என்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner