எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரிட்டிஷ் சிங்கத்தையும் மதவெறி பாம்பையும் எதிர்கொண்டவர்: ராஜ்மோகன் காந்தி

ராய்ப்பூர், ஜூன் 12 காந்தியாரை ‘சாதிரிய பனியா’ என்று பாஜக தலைவர் அமித் ஷா வர்ணித்ததற்கு  காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் ராஜ்மோகன் காந்தி, மகாத்மா காந்தி இருந்திருந்தால் தற்போது அவருடைய நோக்கம் அமித் ஷா-வை விட வித்தியாசமானதாகவே இருக்கும் என்று ராய்ப்பூரில் கூட்டம் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.

“பிரிட்டிஷ் சிங்கம், சாதி-மதவெறி பாம்புகளை ஆட் கொண்டு வென்றவர் காந்தி, அவர் சாதுரிய பனியா என் பதற்கும் மேம்பட்டவர். இன்று காந்தி இருந்திருந்தால் பலவீனமானவர்களையும் அப்பாவிகளியும் வேட்டையாடும் சக்திகளுக்கு எதிராக அவர் போராட்டம் செய்து தோற்கடித் திருப்பார்” என்று அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோபாலகிருஷ்ண காந்தி

அமித் ஷாவின் கருத்துக்கு காந்தியாரின் மற்றொரு பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறும்போது, சாதுரிய பனியா கருத்தை அவர் கேட்டிருந்தால் சிரித்திருப்பார், அந்த வர்ணனைக்காக அல்ல அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் மட்டரகமான சிந்தனையையும் நினைத்து சிரித்திருப்பார் என்றார்.

ராமச்சந்திர குகா

வரலாற்றறிஞர் ராமச்சந்திர குகா கூறும்போது, “அமித் ஷா-வின் கருத்து கொடூரமானது பாஜக தலைவராக இருப்பவர் கூறத் தகுதியில்லாத வார்த்தை’’ என்று சாடினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner