எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீநகர், ஜூன் 12 ஜம்மு-காஷ்மீரில் அரசியல் பிரச்சி னைக்கு ராணுவ நடவடிக்கை கள் மூலம் தீர்வு காண முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறினார்.

சிறீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி யில் அவர் மேலும் பேசி யதாவது:

ஜம்மு-காஷ்மீரில் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்ப தற்காக, பேச்சுவார்த்தையை முன்னெடுக்கக் கூடாது என்ற தெளிவான முடிவோடு மத் திய அரசு உள்ளது. இதனால், இந்த மாநிலத்தின் நிலைமை மோசமடைந்து விட்டது. மாநிலத்தில் அமைதியை மீட் பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியைடந்து விட்டது.

காஷ்மீர் பிரச்சினை, அரசி யல் ரீதியிலான பிரச்சினை யாகும். இதற்கு, இந்த மாநில மக்களின் விருப்பத்துடன் அரசியல் ரீதியில்தான் தீர்வு காணப்பட வேண்டும். அதற் குப் பதிலாக, ராணுவ நட வடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி யிலும், சர்வதேச எல்லையி லும் தொடர்ந்து மோதல்கள் நடைபெறுவது இந்த மாநி லத்தின் அமைதியை சீர் குலைக்கின்றன.

எனவே, ஜம்மு-காஷ்மீர் அரசிடமும், பாகிஸ்தான் அர சிடமும் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
ஏற்கெனவே தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் காஷ் மீர் பள்ளத்தாக்குப் பகுதியில், அமைதியை நிலைநாட்டுவ தற்காக, இளைஞர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படை களைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மாணவர் களின் குறைகளைக் கேட் பதற்குப் பதிலாக, அவர்களை ஒடுக்குவதற்காக, ராணு வத்தை மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கட்ட விழ்த்து விடுகிறது. சிறீநகரில் பெண்கள் கல்லூரி வளாகத் துக்குள் கூட ராணுவம் செல் லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

நான் முதல்வராக இருந் திருந்தால், பள்ளி, கல்லூரி முன் போராட்டம் நடை பெற்றால், மாணவர்களின் குறைகளைக் கேட்பதற்காக, அடுத்த நாளே கல்லூரிக்குச் சென்றிருப்பேன். ஜம்மு-காஷ் மீர் மாநிலத்துக்கென சிறப்பு தகுதியும், பொருளாதார தன் னாட்சி அதிகாரமும் உள்ளது. இந்த நிலையில், சரக்கு-சேவை வரியை அமல்படுத் துவதால், இந்த மாநிலத்துக்கு இழப்பு ஏற்படுமானால், அதை தேசிய மாநாட்டுக் கட்சி அனுமதிக்காது. இந்த மாநிலத்தின் பொருளாதார சுயாட்சி உரிமையை எக்கார ணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner