எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஜூன் 13 உத்தரப் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயாரா? என்று பாஜகவுக்கு பிகார் மாநில முதல்வரும், அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலை வருமான நிதீஷ் குமார் சவால் விடுத்தார்.

பிகாரில் தாம் செயல்படுத்திய நலத் திட்டங்கள் மீது நம்பிக்கையிருந்தால், அந்த மாநில சட்டப் பேரவையைக் கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக சவால் விடுத்திருந்த நிலையில், அக்கட்சிக்கு பதி லளிக்கும் வகையில் நிதீஷ் குமார் இவ்வாறு தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா, பிகார் மாநில சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்த தயாரா? என்று நிதீஷ் குமாருக்கு சவால் விடுத்திருந்தார்.

இதுகுறித்து பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர் களிடம் நிதீஷ்குமார் திங்கள்கிழமை பேசியபோது கேள்வி யெழுப்பப்பட்டது. அப்போது அவர், பிகார் மாநில சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்துவது தொடர் பான பாஜகவின் சவாலை தாம் ஏற்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

பிகார் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்தத் தேர்தலானது, உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட வேண்டும். பாஜகவுக்கு துணிச்சல் இருந்தால், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். நாளைக்கே தேர்தல் நடத்த அவர்கள் விரும்பினாலும் நான் தயாராக இருக்கிறேன்.

அதுமட்டுமன்றி, பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும் தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும். அந்த இடங்களுக்கும், பிகார், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும்போது தேர்தல் நடத்த வேண்டும் என்று நிதீஷ் குமார் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner