எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 15- பெட்ரோல், டீசலின் விலையை நாள்தோ றும் நள்ளிரவு நேரத்தில் நிர்ணயிப்பதற்குப் பதிலாக காலை 6 மணிக்கு நிர்ணயிக்க வேண் டும் என்ற பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.

பெட்ரோல்-டீசலின் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, புதுச்சேரி உள்ளிட்ட 5 குறிப் பிட்ட நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சோதனை முயற் சியாக செயல்படுத்தின. இதைத் தொடர்ந்து, நாடு முழுமைக்கும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறையை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. இதற்கு பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும், வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல்- டீசலை வாங்கவோ, விற்பனை செய் யவோ மாட்டோம் என்றும் அறிவித்திருந்தனர்.

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசலின் விலை வெள்ளிக்கிழமை முதல் (ஜூன் 16) நாள்தோறும் நிர்ணயிக்கப்படவுள்ளது.

இந்த விலை நிர்ணயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த பெட் ரோல் விற்பனை நிலைய டீலர் கள் தங்களது அறிவிப்பை புதன் கிழமை திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில், மத்திய பெட் ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் இந்த விவகாரம் தொடர்பாக பெட் ரோல் விற்பனை நிலைய டீலர் கள் சங்கப் பிரதிநிதிகள் புதன் கிழமை பேச்சுவார்த்தை நடத் தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அகில இந்திய பெட் ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அசோக் பத் வார் செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘மக்கள் நலனுக்காக, நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை செயல்படுத் துவது என்று அரசு முடிவு செய் துள்ளது. அதேபோல், நாங்க ளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை நடத்தப் போவதாக அறிவித் திருந்த வேலைநிறுத்த போராட் டத்தை திரும்ப பெறுகிறோம்‘ என்றார். வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை பெட் ரோல் விற்பனை நிலைய டீலர் கள் திரும்ப பெற்றதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பெட்ரோல், -டீசலின் விலை வெள்ளிக்கிழமை முதல் அம லுக்கு வரவுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner