எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சூர், ஜூன் 15- விவசாயிகள் உற்பத்தி செய்திடும் அனைத்து விவசாயப் பொருள்களுக்கும் ஒவ்வோராண்டும் குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயித்திட சட்டம் கொண்டு வரவேண்டும் என் றும், இவ்வாறு நிர்ணயிக்கப் படும் விலையானது விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செல வினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப் பட வேண்டும் என்றும், இப்பிரச் சினையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் எழுப் பிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கேரளாவில் திருச்சூரில் இ. எம்.எஸ். நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பங் கேற்று உரை யாற்றுகையில் சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது ஒரு தற் காலிகநிவாரணமாகும். விவசாயிகள் உற்பத்தி செய்திடும் விளைபொருள்களுக்கு ஒவ் வோராண்டும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திடுவது தான் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வினை அளித்திடும்.விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது பிரதமர் மோடி தனது தேர்தல் அறிக்கை யில் அளித்துள்ள உறுதிமொழி யாகும். ஆனால் அதனை நிறை வேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார்.

மேலும் அவர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் ஆணையத்தின் பரிந்து ரையின் அடிப்படையில் உற் பத்திச் செலவினத்து டன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்கிற உறுதி மொழியையும் விவசாயிகளுக்கு அளித்திருந்தார்.

இவ்விரு உறுதிமொழிகளை யுமே மோடி அமல் படுத்திட வில்லை. இப்போது மத்திய அரசு, மாநில அரசுகளை கடன் தள்ளுபடிக்கான பணத்தைக் கண்டுபிடியுங்கள் என்று கேட் டுக்கொண்டிருக்கிறது. இது தன்னுடைய பொறுப்பை மிக வும் விசித்திரமான முறையில் கைகழுவும் போக்காகும். நாட்டு மக்களுக்கு உணவு அளித்துவந்த உழவர்களுக்கு மோடி அரசு துரோகம் செய் திருக்கிறது. இளைஞர்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது. இந்தநிலையில் எப்படி மோடி அரசாங்கம் மூன்றாண்டு நிறை வைக் கொண்டாடிக் கொண்டி ருக்கிறது என்று கேட்க விரும்புகிறோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner