எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 16 பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ண யிக்கும் முறை, நாடு முழுவதும் இன்று அமலாகிறது. அன்றைய விலை விவரம் தினமும் காலை 6 மணிக்கு பங்க்குகளில் மாற் றம் செய்யப்படும். புதிய நடைமுறையின் முதல் நாளான இன்று  ஒரு லிட்டர் பெட்ரோல் 1.12, டீசல் 1.24 குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02க்கும், டீசல் 57.41க்கும் விற்பனை செய்யப்படும். காலை 6 மணி யில் இருந்து இந்த விலை அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி செலவு, இறக்குமதி மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக் கின்றன. 2010 ஆம் ஆண்டில் இருந்து பெட்ரோல் விலையும், 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டீசல் விலையும் சந்தை விலைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வரும்போது, அதிகளவில் உயர்த்தியதுபோல் தெரிகிறது. விலை உயர்வு வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு பதிலாக தினசரி பெட் ரோல், டீசல் விலையை முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக, கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யும் முறை பரிசோதனை முயற்சியாக புதுச்சேரி, ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினம், ராஜஸ்தானில் உதய்ப்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகாரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிறகு நாடு முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

முதலில், நள்ளிரவு 12 மணிக்கு புதிய விலையை பங்க்குகளில் மாற்றம் செய்வது எனவும், அதற்கு முன்னதாக முந்தைய நாள் இரவு 8 மணிக்கு டீலர்களுக்கு தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இது நடைமுறை சாத்தியமற்றது என எதிர்ப்பு தெரிவித்த பங்க் உரிமையாளர்கள், 16 ஆம் தேதி முதல் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். பின்னர், நள்ளிரவுக்கு பதிலாக தினமும் காலை 6 மணிக்கு விலை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று முதல் தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசலுக்கான அன்றைய விலை அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விலை விவரம்

தெரிந்து கொள்வது எப்படி?

பங்க்குகளில் வாடிக்கை யாளர்கள் அன்றைய விலையை அறிந்து கொள்ளலாம். இது தவிர, இந்தியன் ஆயில் நிறு வனத்தின்  என்ற மொபைல் ஆப்மூலம் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளலாம்.   என 92249 92249 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் விலை விவரம் மொபைலுக்கு அனுப்பப்படும் என எண்ணெய் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner