எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, ஜூன் 16 கேர ளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கவிழா நாளை நடைபெறுகிறது.

அவ்விழாவில், பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவை யைத் தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்கிறார். விழா மேடையில் மெட்ரோ மனிதன் என புகழப்படும் பொறியாளர் சிறீதரன் அமர்வ தற்கு அனுமதி மறுக்கப்ப ட்டுள்ளது. அதனால் பல முனைகளிலிருந்தும் கண்ட னங்கள் வெடித்துள்ளன.

கேரளாவின் கொச்சி நகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக் கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட் டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங் கப்படவுள் ளது. நாளை  பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து முதல் ரயிலை இயக்கி வைப்பதுடன், அதில் பயணமும் செய்யவுள் ளார். இந்நிகழ்ச்சிக்கான விழா மேடையில் மாநில ஆளுநர் பி.சதாசிவம், மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, முதல் வர் பினராயி விஜயன் ஆகி யோர் அமர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவ தற்காக அரும்பாடுபட்ட திட் டத்தின் முதன்மை ஆலோசகர் சிறீதரன் விழா மேடையில் அமர்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல் வர் உம்மன் சாண்டி, விழா நடைபெறுகின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.வி.தாமஸ், சட்டமன்ற உறுபபினர் பி.டி.தாமஸ் ஆகி யோருக்கும் அனுமதி மறுக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.டி.தாமஸ் கூறும்போது, ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சி மெட்ரோ ரயிலுக்காக அடிக்கல் நாட்டியபோது விழா மேடையில் அனைவருக்கும் இடம் அளிக்கப்பட்டது. தற் போது மறுக்கப்படுவது பாஜக வின் அகந்தையை காட்டுகிறது. மெட்ரோ ரயில் கேரளாவின் கனவுத் திட்டமாகும். இதற்காக அயராது பாடுபட்டவர்களைப் பார்வையாளர்கள் மாடத்தில் அமரச் சொல்வதில் எந்த நியாயமுமில்லை’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner