எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மீரட்(உபி) ஜூன் 17    மீரட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி நவீன் குமார் என்பவர் மீது வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு உள்ளது மேலும் வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

வருமானவரித்துறை மற்றும் பொருளாதார பிரிவு கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தங்கம் வைரம், உள்ளிட்ட கருப்புப் பணத்தை கைப்பற்ற வந்த அதிகாரிகளுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டிலிருந்து 40 துப்பாக்கிகள், 40 டஜன் துப்பாக்கி ரவைகள், கைப்பற்றப்பட்டன.  தடை செய்யப்பட்ட கருப்பு மான் தோல் மற்றும் எலும்புகள் கிடைத்தன.  மேலும் அவரது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டிகளைத்திறந்தபோது அதில்மாட்டிறைச்சிகிடைத் தது.சுமார் 117- கிலோ மாட்டி றைச்சியை அவர் சந்தைக்கு அனுப்ப வைத்திருந்தார் என் றும், சட்ட விரோதமாக அவர் இத்தனை நாள் மாட்டிறைச்சி வதைக்கூடம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இவரது தந்தை மீரட் பகுதி பாஜக பிரமுகர். இவர் சொந்தமாக ‘இந்து சுரக்ஷா

மஞ்ச்' என்ற அமைப்பு ஒன்றை யும் நடத்தி வருகிறார். தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தவருவது தெரிந் தவுடன் அவர் வீட்டிலிருந்து குடும்பத்தாருடன் தப்பிவிட் டார்.

இவர் மீது மீரட் புறநகர் காவல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இதனடிப் படையில் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

நாடு முழுவதும் மாட்டி றைச்சி தொடர்பான பல்வேறு வழக்குகள் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

ஆட்டிறைச்சியை தன்னு டைய வீட்டில் வைத்திருந்த அக்லாக் என்ற முதியவரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டி அவரை அடித்து கொலை செய்தனர். ஆனால், இந்தக் கொலையைத் தூண்டியஉபிசட்டமன்றஉறுப் பினர் சங்கித் சோம் சொந்த மாக மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner