எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 18- கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாள் களாக பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாள்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தள்ளது. இதில் காவிரி நதி உருவாகும் குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரி, பாகமண்டலா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிக ளில் கன மழை பெய்து வரு கிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடு கின்றது. இதே போல மைசூரு, மாண்டியா, ராம்நகர், பெங்க ளூரு ஆகிய மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் கூடுதலாக தண்ணீர் வருகிறது.

கடந்த வாரத்தில் வினா டிக்கு 600 கன அடி தண்ணீர் வந்த நிலையில் ஜூன் 16இல் அணைக்கு வினாடிக்கு 1500 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் வறண்டு கிடந்த கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கி உள் ளது.

மொத்தம் 124.8 அடி கொள் ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போதைய நிலவரப்படி 68.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக் கும் பட்சத்தில் இனி வரும் நாள்களில் நீர் மட்டம் கணிச மாக உயர வாய்ப்புள்ளது.

இதே போல கேரளாவில் பருவ மழை தீவிரம் அடைந் துள்ளதால் மைசூரு மாவட்டத் தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட் டம் உயரத் தொடங்கி உள்ளது.

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு முக்கிய அணைக ளுக்கும் கணிசமான அளவில் நீர்வரத்து அதிகரித்து இருப்ப தால் கர்நாடக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு திறக்க வாய்ப்பு

கர்நாடகா மற்றும் கேரளா வில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் போது தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும்.

இந்த மழை தொடரும் பட்சத்தில் மேட்டூர் அணைக் கும் இனி வரும் நாள்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள் ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல்லில் கொட்டுகிறது

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடகா, -தமிழக எல்லையான பிலிகுண் டுலு பகுதியில் தற்போது 800 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் நேராக ஒகேனக் கல் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டு கிறது. காவிரி ஆற்றிலும் தண் ணீர் ஓடுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 130 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று மேலும் சரிந்து 106 கன அடியானது. அணை யில் இருந்து குடிநீர் தேவைக்கு 500 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதல் தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால் அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner