எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 20- பல்வேறு கொடூரமான கிரிமினல் குற்றங் களில் ஈடுபட்டு மாநில உயர் நீதிமன்றங்களால் மரண தண் டனை விதிக்கப்பட்டவர்கள் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்களையும், மேல் முறையீட்டு மனுக்களை யும் தாக்கல் செய்வது வழக்கம்.

இந்த மனுக்களின் மீதான சில விசாரணையில் மரண தண்டனையை ஆயுள் தண்ட னையாக குறைப்பதுண்டு. ஆனால், பல மனுக்கள் நிராக ரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு மரண தண் டனையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளிகளின் கடைசி வாய்ப்பாகவும், நம்பிக்கை நட் சத்திரமாகவும் குடியரசுத் தலை வரின் ஒற்றை கையொப்பம் இருந்து வருகிறது.

இதனால், மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் இறுதி முயற்சியாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக் களை அனுப்பி வருகின்றனர்.

குற்றத்தின் தன்மை உள் ளிட்டவற்றை மிக கூர்மையாக ஆய்வு செய்து, இந்த கருணை மனுக்களை பரிசீலனை செய் யும் குடியரசுத் தலைவர் வெகு சிலரின் மரண தண்டனையை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைத்து உத் தரவு பிறப்பிப்பது உண்டு.

அவ்வகையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளி கைக்கு அனுப்பப்பட்ட இரு கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார்.

இவற்றில் ஒரு மனு கடந்த 2012-ஆம் ஆண்டில் நான்கு வயது குழந்தையை இருவர் சேர்ந்து கடத்திச் சென்று பாலி யல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு தொடர்பானது. மற்றொரு மனு கடந்த 2007ஆம் ஆண்டு வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த இளம்பெண்ண மூன்றுபேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தொடர்பானது.

இந்த இரு கருணை மனுக்களும் கடந்த மே மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் நிரா கரிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

குடியரசுத் தலைவராக தனது பதவிக்காலத்தில் பிர ணாப் முகர்ஜி நிராகரித்த கடைசி கருணை மனுக்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner