எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜூன் 22 இலங்கையில் 25 ஆண்டுகளாக நடை பெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உதவும் வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, இலங்கை நாடாளுமன்றத்தில அவர், புதன் கிழமை மேலும் கூறியதாவது: போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தும் குழுவை காணாமல் போனவர்கள் தொடர்பான அலு வலகம் (ஓஎம்பி) வழிநடத்தும். அந்த அலுவலகம், எந்த சட்ட நடவடிக்கையையும் தொடங் காது. ஆனால், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்கும்.

போரின்போது, காணாமல் போனவர்களின் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பெற முடியாமலும், அரசின் இதர சலுகைகளைப் பெற முடியாமலும், அவர் களுடைய உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காணாமல் போனவர்கள் குறித்து அவர் களுடைய உறவினர்களுக்கு ஓஎம்பி சான்றிதழ் அளிக்க வேண் டும். அந்தச் சான்றிதழ் மூலம், தற்போதைய நடைமுறைப் பிரச்னைகளுக்கு அவர்களுக்குத் தீர்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி யுள்ளது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner