எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 23 முதல்வர் நாராயணசாமியின் நிதி அதி காரங்களைப் பறிக்கும் முயற்சி யில் ஆளுநர் கிரண்பேடி பிறப் பித்த ஆணையை அறிவிக்கை யாக வெளியிட தலைமை செயலர் மறுத்து, அக்கோப்பை உள்துறைக்கு அனுப்பி வைத் துள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல் வர் நாராயணசாமியும் இடை யில் மோதல் உச்சத்தை எட்டி யுள்ளது.

இந்நிலையில் நிதித் துறை யை வைத்துள்ள முதல்வர் நாராயணசாமியின் நிதி அதி காரங்களை மொத்தமாகத் திரும் பப் பெறும் வகையில் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ள விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக உயர் அதி காரிகள் தரப்பில் கூறியதாவது:

‘’புதுச்சேரி யூனியன் பிர தேசத்தின் நிர்வாகி என்ற முறை யில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல்வருக்கான நிதி ஆதாரங்களை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார்.

யூனியன் பிரதேச முதல் வருக்கு தற்போது ரூ.10 கோடி வரை செலவிடும் அதிகாரம் உள்ளது. துறைச் செயலாளர் களுக்கு ரூ.2 கோடி வரை செலவிடும் அதிகாரம் உள்ளது. இந்த உத்தரவின் மூலம் முதல்வரின் நிதி அதிகாரத்தை முற்றிலும் குறைத்து விட்டு, நிதி விவகாரங்களில் எந்த அதி காரமும் இல்லாத தலைமைச் செயலாளருக்கு ரூ.5 கோடி வரை செலவிடும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

முதல்வர் மற்றும் துறை செயலாளர்களின் நிதி அதி காரங்களை திரும்பப் பெறும் வகையில் அவ்வுத்தரவில் தெரி விக்கப்பட்டிருந்தது. மேலும், தலைமைச் செயலாளருக்கு நிதி அதிகாரத்தை ரூ.5 கோடியாக்கி யிருந்தார். இந்த உத்தரவு குறித்த அறிவிக்கையை வெளியிடுமாறு தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவுக்கு, ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால், தலை மைச் செயலாளர் அந்த உத்த ரவை செயல்படுத்த மறுத்து விட்டார். இவ்வுத்தரவு கோப் பினை உள்துறை செயலருக்கு புதுச்சேரி தலைமைச் செயலர் அனுப்பி வைத்து விட்டார். கிரண்பேடி தொடர்பான உத்த ரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இதனால் தற்போ தைய நிலையே தொடருகிறது.

ஆளுநரின் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் நிதி துறையை வைத்திருக்கும் முதல் வரால் எந்த திட்டத்துக்கும் ஒரு ரூபாய் கூட ஒதுக்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கு ரூ.50 கோடி வரையிலான நிதி செலவிடும் அதிகாரம் கிடைத்து விடும்.

மேலும் அமைச்சர்களும் தங்கள் துறைச் செயலாளர்கள் மூலம் ரூ.2 கோடி செலவிடும் உரிமையை இழந்து விடுவர் என்று குறிப்பிட்டனர்.

அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடி தரப்பில் கூறுகை யில், “நிதி விவகாரங்களில் மே லும் செம்மையாக செயல்பட ஏதுவாகும்” என்று குறிப்பிடு கின்றனர். ஆளுநரின் இந்த உத் தரவு குறித்து கேட்டதற்கு முதல் வர் நாராயணசாமி பதிளிக்க மறுத்துவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner