எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அலுவலக தகவல் பரிமாற்ற மின்னஞ்சல்கள் செக்ஸி யான பெண்கள் அணியும் குட்டைப் பாவாடை மாதிரி இருக்க வேண்டுமாம். டில்லி பல்கலையின் பாடத்திட்டம் பகிர்கிறது.

அரைப் பாவாடை போல் குட்டையாகவும், முக்கிய பகுதிகளை மறைத்து உள்ளடக்கும் அளவுக்கு நீளமான தாகவும் இருக்க வேண்டும் என்று டில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரி களில் பி.காம் (ஹானர்ஸ்) பட்டபடிப்பில் 'பேசிக் பிசினஸ் கம்யூனிகேஷன் (அடிப்படை வர்த்தக தகவல் தொடர்பு) என்ற புத்தகம் பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் உள்ளது.

இதை எழுதியவர் டில்லி கல்லூரி ஒன்றின் வணிகத் துறை முன்னாள் துறைத் தலைவர் சி.பி.குப்தா. இந்த பாடத் திட்டத்தில் மின்னஞ்சல் (இ-மெயில்) எப்படி எழுத வேண் டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இ-மெயில் அரைப் பாவடை அளவுக்கு சிறியதாகவும், முக்கிய பகுதிகளை உள்ளடக்கும் அள வுக்கு நீளமாகவும் இருக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது. இது இரட்டை அர்த்தத்தை ஏற்படுத்துவதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இரட்டை அர்த்தம் உள்ள இந்த விளக்கத்தை படித்த ஒரு மாணவி இந்த புத்தகத்தை எழுதியவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக இதுபற்றி யாரும் கேள்வி எழுப்பாதது அந்த மாணவிக்கு ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரட்டை அர்த்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியதும், இதை எழுதிய சி.பி.குப்தா வருத்தம் தெரி வித்துள்ளார். மேலும் இந்த வாக்கியத்தை, தான் சொந்த மாக எழுதவில்லை என்றும் வெளிநாட்டு புத்தகம் ஒன்றி லிருந்து எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள் ளார்.

இனிமேல் அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாக் கியங்கள் நீக்கப்படும் என்றும் குப்தா உறுதியளித்துள்ளார்.

இதே போல் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு  உடற்கல்வி பாடப் புத்தகம் ஒன்றில், பெண்களின் உடலமைப்பு 36.24.36 என்ற அளவில் இருந்தால் அது சிறப்பான உடலமைப்பு என இடம்பெற்றிருந்து. இது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் அது தனியார் தயாரித்து கொடுத்த பாடத்திட்டத்தில் அப்படி இருக்கிறது, அதற்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்று அறிவித்திருந்தது.

மத்திய அரசின் மனிதவளத்துறையின் கீழ் இயங்கும் கல்விநிறுவனங்கள் தங்களின் பாடத்திட்டங்களில் தொடர்ந்து பெண்களை சிறுமைப்படுத்தி இவ்வாறு எழுதிவருகிறது, எதிர்ப்பு கிளம்பும் போதெல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி தப்பித்துவருகிறது, தவறு நடந்துவிட்டது என்று  வருத்தம் தெரிவிப்பதுமில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner