எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆளும் மராட்டிய மாநிலத்தில்

கடந்த ஆறு  மாதங்களில்

426 விவசாயிகள் தற்கொலை

அவுரங்காபாத், ஜூன் 24 மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், அவுரங்காபாத் மண்டல ஆணையர் அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூன்  18 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 426 விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதில், பீட் மாவட்டத்தில் மிக அதிகமாக 63 பேரும், ஹிங்கோலி மாவட்டத்தில் மிக குறைவாக 23 பேரும் தற்கொலை செய்துள்ளனர். நாண்டேடில் 71ம், ஒஸ்மானாபாத்தில் 66ம், அவுரங்காபாதில் 60ம், பார்பனியில் 55ம் ஜல்னாவில் 36ம், லட்டூரில் 32 பேர் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட 426 விவசாயிகளில், 257 வழக்குகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த 55 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற 114 பேரின் மனுக்கள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்!

சிறீஅரிகோட்டா, ஜூன் 24 ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.29 மணிக்கு 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 23 ஆவது நிமிடத்தில், தான் சுமந்து சென்ற அனைத்து செயற்கைக்கோள்களையும் விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தியது.

இதில் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைக்கோள் முக்கியமானதாகும். இது 712 கிலோ எடைகொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 505 கி.மீ., உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.

மேலும் இந்த செயற்கைக்கோளில் நிலப் பகுதியை துல்லிய மாக படம் பிடிக்க நவீன கேமராக்கள், தொலையுணர்வு கருவிகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடம் 41 நொடிகளில் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட்டில் இருந்து பிரிந்து நிலைநிறுத்தப்பட்டது.

நானோ செயற்கைக்கோள்கள்: பிஎஸ்எல்வி சி}38 ராக்கெட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து மட்டும் 10 செயற்கைக்கோள்களும், இங்கிலாந்தில் இருந்து 3, பெல்ஜியத்தில் இருந்து 3, இத்தாலியில் இருந்து

3 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.

இதுதவிர ஆஸ்திரியா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், லிதுவானியா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளின் நானோ செயற்கைக்கோள்களோடு இந்தியாவின் சார்பில் ஒரு நானோ செயற்கைக்கோளும் புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இந்தச் செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோவாகும்.

சிவன் கோயிலில்

மரகதலிங்கம் கொள்ளை

காஞ்சிபுரம், ஜூன் 24 திருப்போரூர் அருகே இல்லலூர் சுயம்புலிங் கேஸ்வரன் கோயிலில் மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பூட்டை உடைத்து சிவன் கோயிலில் உள்ள மரகதலிங்கத்தை கொள்ளையடித்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner