எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆக்ரா, ஜூன் 26 ஆக்ரா மேயராக உள்ளவர் பாஜகவைச் சேர்ந்த இந்திரஜித் ஆர்யா. அவருடைய வகுப்புவாத வெறிப் பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்பாக ஆக்ரா நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திரஜித் ஆர்யா பேசும் போது, பாகிஸ்தான் நாட்டின் கொடி யைக் கொளுத்தவேண்டும் என்று பேசி னார்.

விழா தொடக்கத்துக்கு

முன்பாக...

வாரணாசியைத் தலைமையிட மாகக் கொண்டு இயங்கிவரும் இந்து-பலோச் கூட்டமைப்பின் சார்பில் ஆக்ரா நகரில்  இம்மாதம் 20 ஆம்நாள்  ‘‘பலு சிஸ்தான் விடுதலையில் இந்தியாவின் பங்கு’’ என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆக்ரா நகரின் மேயர் இந்தி ரஜித் ஆர்யா கலந்து கொண்டு பேசும் போது, அனைத்து விழாக்கள் கொண் டாட்டத்தின்போதும் விழா தொடக்கத் துக்கு முன்பாக பாகிஸ்தான் நாட்டின் கொடியை கொளுத்தவேண்டும் என்று பேசியுள்ளார்.

பிள்ளைகளுக்கும்கூட

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் கூற்றை உறுதிப் படுத்தி அவர் கூறும்போது, “நம் நாட் டின் எல்லையோர அண்டை நாடாக உள்ள பாகிஸ்தான் நாட்டுக்குப்  பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் கொடியை கொளுத்தி, பாகிஸ் தான் நாட்டுக்குப்  பாடம் புகட்ட வேண்டியது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடி மகனின் முதற்கடமையாகும். இது போல்நம்முடையஒவ்வொரு விழாக் களிலும் செய்யவேண்டும். இதை நம் முடைய மக்கள், அவர்களின் பிள்ளை களுக்கும்கூட இதை சொல்லிக் கொடுக்கவேண்டும்’’ என்றார்.

பாகிஸ்தானை ஆதரிப்பவர்களை...

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

‘‘விழாக்களை நடத்துவது மட்டுமல் லாமல், விழாக்கள் தொடங்கப்படுவ தற்கு முன்பாக பாகிஸ்தான் நாட்டின் கொடியைக் கொளுத்திய பிறகே விழா வைத் தொடங்கிடவேண்டும். அதன் மூலமாக நம் நாட்டில் இருந்துகொண்டு பாகிஸ்தானை ஆதரிப்பவர்களை வெளி யேற்றுவது மட்டுமல்லாமல், பாகிஸ் தானுக்கு சரியான பதிலடி கொடுப்பதாக இருக்கும்.

காஷ்மீரின் பெயரால் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது. இந்தியா, சீனாவுக்கிடையிலும் பிரச் சினைகளைத் தூண்டிவிடுகிறது. காஷ் மீரில் பதற்றத்தை உருவாக்கி வரும் அண்டை நாட்டை பழிவாங்கிடும் வகையில், பலுசிஸ்தானம் விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் உதவிவரு கிறோம்.

பாகிஸ்தான் பாடம்

கற்க முடியாது

ஒவ்வொரு கல்லையும் பாதுகாப்ப தில் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம். நாடு முழுவதும் பாகிஸ்தான் நாட்டின் கொடியைக் கொளுத்துவது குறித்து மக்களிடையே பரப்புரை செய்வோம். நாம் ஒன்றுபடாவிட்டால், நம்முடைய குழந்தைகள்கூட அவர்களின் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். பாகிஸ் தான் பாடம் கற்க முடியாது’’ என்றார்.

கர்வாப்சி எனும் இந்துத்துவா திட்டத்தை நடத்தியவர்

கடந்த மக்களவைத் தேர்தல் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக 2012 ஆம் ஆண்டில் பாஜகவின் சார்பில் உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிட்டு வென்று ஆக்ராவின் மேயரான இந்திரஜித் ஆர்யாசமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்த வர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரியில் கர்வாப்சி எனும் இந்துத்துவா திட்டத்தை நடத்திய வரும் ஆவார்.

கடந்த காலங்களில் சிவசேனா மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் போராட்டங் களின்போது பாகிஸ்தான் கொடியை எரித்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 28 அன்று தேசிய நெடுஞ்சாலை-1 பஞ்சாப் மாநிலத்தில் பக்வாரா பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்படையினர் மீதான தீவிரவாத தாக்குதல்களைக் கண் டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, சிவசேனா அமைப்பினர் பாகிஸ்தான் கொடியை எரித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner