எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருப்பதி, ஜூன் 27 திருப் பதியில் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட பக்தர் பத்மநாபன் என்பவர் கோமா நிலைக்குச் சென்று மூன்று மாதங்களுக் குப்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். உயிரிழந்த பத்மநாபன் குடும்பத்தாருக்கு இழப்பீட்டை திருப்பதி திருமலை தேவஸ் தானம் வழங்குமா என்கிற கேள்வி பலராலும் முன்வைக் கப்பட்டுள்ளது.

20.3.2017 அன்று பத்மநாபன் எனும் பக்தர் பாதுகாவலர் களால் தாக்கப்பட்டார். படு காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாகவே அவர் சுய நினைவின்றி கோமா நிலையில் இருந்துள்ளார்.

உயிரிழந்த பத்மநாபனின் மகன் கோடா பத்மநாபன் கூறும்போது, திருப்பதி திரு மலை தேவஸ்தானத்தின் பாது காவலர்கள் கடுமையாகத் தாக் கியுள்ளனர். ஆனால், பாதுகாவ லர்களை தேவஸ்தானம் பாது காத்துவருகிறது.

நிகழ்வு நடந்த நாளில் பக் தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாலேயே அவர் மோச மான நிலைக்கு சென்றார், அவருக்கு தேவஸ்தானத்தின் பணியாளர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்கள் என்று தேவஸ்தானத்தின் சார்பில் கூறப்பட்டது.

ஆனால், அவர் தாக்கப்பட்ட அதே நாளில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. திருமலாவில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்க்கப்பட்டார். அதன் பிறகே, திருப்பதி தேவஸ்தானத் தால் நிர்வகிக்கப்படும் சிறீ வெங்கடேசுவரா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். திருப்பதி தேவஸ் தானம் பத்மநாபனின் மருத் துவ செலவை ஏற்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, மூன்று மாத காலத்திலும் செயற்கை சுவாசத்துக்கான வெண்டிலேட் டரை மட்டுமே பொருத்தி இருந்தார்கள்.

இதனிடையே திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் வெளியில் வெளிப் படையாக அறிவிக்கப்படாமல் உயிரிழந்த பக்தரின் குடும்பத் தினருக்கு மிகவும் ரகசியமாகÕ இழப்பீட்டுத் தொகை வழங்கப் படுவதாகத் தெரிகிறது.
வழக்கமாக திருப்பதிக்கு வருகைதரும் பக்தர்களிடையே இயற்கையாக உயிரிழப்பு அல்லது விபத்தால் உயிரிழப்பு நேரும்போது, மனித நேயத்தின் அடிப்படையில் இழப்புக்கு உள்ளான குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வா கத்தால் இதுபோன்று இழப் பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை   வழங்கப்படும்.

ஆனால், பத்மநாபன் உயி ரிழப்பில் முறையாக கொலை வழக்குத் தொடரப்பட வேண் டாமா? அவருடைய மரணத் துக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயில் நிர் வாகம் பொறுப்பேற்க வேண் டாமா? எனும் கேள்வி கோயில் நிர்வாகத்திடம் மனித நேயத்தை எதிர்பார்ப்பவர்களி டம் எழுந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner