எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஹாசன், ஜூன் 28 கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் நகரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமையா, அந்தப் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

பா.ஜ.க.வுக்குத்

தகுதி கிடையாது

மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர். நான் காந்தியை முன்மாதிரியாக எடுத்து நடந்து வருகிறேன். அத் தகைய பெரிய தலைவரை பற்றி பா.ஜனதாவினர் கீழ்த்தரமாக பேசி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரை பா.ஜனதாவினர் கீழ்த்தரமாக பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய கொள்கை கொண்ட பா.ஜனதாவினர் இந்தி யாவை ஆளுவதற்கு தகுதியே கிடையாது.

கர்நாடகத்தில் தேர்தல் நெருங் குவதால் மிகப்பெரிய நாடகம் அரங்கேறி வருகிறது. எடியூரப்பா ஆதிதிராவிடர் வீடுகளுக்குச் சென்று சாப்பிடுகிறார். ஆதிதிரா விடர்கள் மீது எடியூரப்பாவுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், ஆதிதிராவிடப் பெண்களை உங்கள் (எடியூரப்பா) சமுதாய ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிப்பீர்களா? நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஆதி திராவிடர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?.

ஜாதியால் தான் நாடு வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஜாதியை ஒழிப்பதற்காக காந்தி, பசவண் ணர், அம்பேத்கர் பாடுபட்டனர். அவர்களின் கொள்கைகளின்படி தான் நான் ஆட்சி நடத்தி வருகிறேன். சாதியை ஒழிக்க நான் பாடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

நான் சட்டம் படித்துக் கொண் டிருந்த போது, விவசாயம் செய்து கொண்டே தான் கல்லூரிக்குச் சென்று வந்தேன். விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் (எடி யூரப்பா) எல்லாம், ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் விவ சாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வேன் என்று கூறி வருகின் றனர்.

நீங்கள் ஆட்சிக்கு வந்து விவசாய கடனைத் தள்ளுபடி செய்வதைவிட, தற்போது மத்திய அரசிடம் கூறி கடனை தள்ளுபடி செய்தால்கூட, உங்களுக்கு விவசாயிகள் மத்தியில் நல்லப் பெயர் கிடைக்கும். ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தற்போது வெளியே வரமாட்டார்கள். தேர்தல் நெருங் கும் சமயத்தில்தான் அவர்கள் வெளியே வருவார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner