எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 28- சென்னை துறைமுகத்துடன் புதுவை துறைமுகத்தை இயக்க புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக துறைமுக முகத்து வாரத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணியில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஜூலை ஒன்றாம் தேதி துறைமுகம் இயங் கும் என அறிவிப்பு தள்ளி போனது. தற்போது முகத்துவாரம் தூர்வா ரும் பணி துரிதமாக நடை பெற்று வருகிறது.

மேலும் துறைமுகத்தில் உள்ள குடோன்கள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளது. இந்த பணிகளை அமைச் சர் கந்தசாமி நேற்று பார்வையிட்டார். துறைமுகத்தில் உள்ள கிடங்குகள் முழுவதையும் அவர் பார்வையிட்டார். துறை முக அதிகாரிகளிடம் தூர்வா ரும் பணிகள் குறித்த விவரங் களை கேட்டறிந்தார். துறை முகம் தூர்வாரும் பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. துறைமுக கட் டமைப்பு பணிகளை மேற் கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதனால் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரம் புதுவை துறைமுகம் இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner