எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஜூன் 29 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடக்க நிகழ்ச்சியில் திரிணாமுல் காங் கிரஸ் பங்கேற்காது என்று அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவில், ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சி நடைபௌது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்கமாட்டார் கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்பை, மத்திய அரசு அவசர அவசரமாக அமல்படுத்துவது மிகுந்த கவலை யளிக்கிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, அவசர கோலத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது மத்திய அரசின் மற்றுமொரு வரலாற்றுப் பிழை யாகும்.

ஜிஎஸ்டியை முறையாக அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத் தியது. ஆனால், அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பை பொறுத்த வரை, ஆரம்பம் முதலே நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். ஆனால், அதனை அமல்படுத்த மத்திய அரசு கையாளும் வழி முறை கவலையளிக்கிறது.

ஜிஎஸ்டி குறித்த தெளிவு இல் லாததால், ஒட்டுமொத்த வர்த்த கர்களும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழப்பத்தி லும் அச்சத்திலும் இருக்கிறார்கள்.

நாட்டில் தற்போதுள்ள நடை முறையின்படி, 20-க்கும் மேற் பட்ட வெவ்வேறு வரிகள் உள் ளன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே வரி விதிப்பை அமல் படுத்துவது நாட்டுக்கு நன்மை யளிக்கும் என்பதால் ஜிஎஸ்டியை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழாண்டுகளாக ஜிஎஸ்டியை எதிர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்த தும் பல்டி அடித்து விட்டது. இப்போது ஜிஎஸ்டியை தங்களது சாதனையாக பாஜக கூறுகிறது.

ஜிஎஸ்டியை எதிர்கொள்வ தற்கு நாட்டின் பொருளாதாரம் இன்னும் தயாராகவில்லை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பான முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை.

எனவே, ஜிஎஸ்டி நடைமுறை மற்றும் விதிமுறைகள் அனைத் தையும் முறையாக வெளியிட்டு, அதுதொடர்பாக முழுமையாக அறிந்துகொள்வதற்கு வர்த்தகர் களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். அப்போது தான் ஜிஎஸ்டியை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner