எழுத்துரு அளவு Larger Font Smaller Fontமும்பை, ஜூன் 30 மகாராட்டிர மாநிலத்தில் சிறையில் பெண் உயிரிழந்ததையடுத்து, சிறை யில் பெண் உயிரிழப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள கைதி களின் வாழ்நிலை, பாதுகாப்பு மற்றும்  கைதிகள்மீதான கவ னம் ஆகியவைகுறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று அம்மாநில சிறைத்துறை நிர்வாகத்துக்கு அம்மாநிலத்தின்  மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

பைகுல்லா சிறையில் மஞ்சுளா ஷெட்டி (வயது 38) எனும் கைதி உயிரிழந்தார். அவருடைய இறப்பைத் தொடர்ந்து, மகாராட்டிர மாநில மகளிர் ஆணை யத் தலைவர் விஜயா ரகாத்கர் மற்றும் மகளிர் ஆணைய உறுப் பினர்கள் சிறைக்கு சென்று விசா ரணை மேற்கொண்டார்கள்.

மகாராட்டிர மாநில அரசிடம் சிறைக்கைதிகள் நிலை குறித்து அறிக்கை அளிப்பதுடன், சிறைக்குள்ளேயே உயிரி ழந்த மஞ்சுளா ஷெட்டியின் இறப்பு குறித்து புலனாய்வு செய்வதற்காக சிறப்பு விசா ரணைக்குழுவை அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மாநில மகளிர் ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை பாந்த்ராவில் உள்ள மகளிர் ஆணையத்தின் அலுவலகத்துக்கு மகாராட்டிர மாநில (சிறைத்துறை பிரிவு)  காவல்துறை துணைத் தலைவர் ஸ்வாதி சாதே ஆஜராகி விளக் கம் அளிக்க வேண்டும் என்றும், சிறையில் மஞ்சுளா ஷெட்டி உயிரிழந்த நிகழ்வு மற்றும்  அதுகுறித்து சிறைத்துறை நிர் வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க வேண் டும் என்றும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பணி ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பணி ஓய்வு பெற்ற இரு காவல்துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவ ரைக் கொண்ட சிறப்பு விசார ணைக்குழுவை அமைத்து சிறைக்குள் பெண் உயிரிழப்பு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக்குழு இரண்டு நாள்களில் விசாரணை யைத் தொடங்கும் என்று செய் தியாளர்களிடம் மகளிர் ஆணை யத் தலைவர் விஜயா ரகத்கர் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner