எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூலை 3 பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் காவல்துறையினருக்கு வாகனங்களை சோதனை செய்ய அதிகாரம் இல்லை என்று கேலிக்கூத்தான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலாந்த் சாகர் மாவட்டத்தில் சையானா காவல் நிலையத்தின் காவல்துறை பெண் அலு வலர் சிரேஷ்தா தாகூர்  பணியின்போது, பாஜகவினரின் வாகனத்தை சோதனை யிட்டு, பாஜகவைச் சேர்ந்த அய்ந்து பேர் மீது வழக்கு பதிவுசெய்து, அவர்களை சிறையில் அடைத்தார். காவல்துறை அலுவலர் சிரேஷ்தா தன்னுடைய கட மையைச் செய்ததால் அவரை உடனடியாக ஆளும் பாஜக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. காவல்துறை அலுவலர் சிரேஷ்தாவை பக்ராயிச் மாவட்டத்துக்கு ஆதித்யநாத் அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் எழுத்துமூலமாக அளித்த உத்தரவில் வாகனங்களை சோதனை செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு, பணியிட மாற்ற உத்தரவை அனுப்பியுள்ளார்.

22.6.2017 அன்று காவல்துறை அலுவ லரான சிரேஷ்தா தலைமையில் காவல் துறையினரின் குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, தலைக்கவசம் அணி யாமல் சென்ற ஒருவரைத் தடுத்துநிறுத்தி, அவருக்கு தண்டத்தொகையாக ரூ.200 விதித்தார். அப்போது, தான் பாஜகவைச் சேர்ந்தவன் என்றும்,  தன்னுடைய பெயர் பிரமோத் குமார் என்றும், தன்னுடைய மனைவி புலாந்த்சாகர் மாவட்ட ஊராட் சிக்குழுவின் உறுப்பினர் என்றும் கூறி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும், அவர்மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படவில்லை. இதனையடுத்து, பிரமோத் குமார் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொலைபேசிமூலமாக தகவல் தெரிவித்தார்.

பாஜக பொறுப்பாளர் பரத்வாஜ் நிகழ் விடத்துக்கு  சென்று பெண் காவல்துறை அலுவலர் மற்றும் பிற காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். தண்டத்தொகை கட்டாமல் கையூட்டு கொடுத்துவிட்டு செல்லுமாறு ஒரு காவலர் கூறியதாக பரத்வாஜ் புகார்  கூறினார்.

இந்நிலையில், பெண் காவல்துறை அலுவலர்  சிரேஷ்தா தாகூர் தன்னுடைய கடமையின்போது பாஜகவினருக்கு என தனியே சலுகை காட்டாததையடுத்து, உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல்வர் எழுத்துமூலமான உத்தரவின்மூலமாக காவல்துறை பெண் அலுவலருக்கு பணி யிட மாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் காவல்துறையின ருக்கு வாகனங்களை தடுத்து சோதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner