எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 பெங்களூரு, ஜூலை 6 கேரளாவைச் சேர்ந்த ஷபீக் சுபைதா ஹக்கீம், திவ்யா, இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் சொந்தமாக ஏற்றுமதி இறக் குமதி நிறுவனம் ஒன்றும் நடத்திவருகின்றனர்.

தங்களது நிறுவனத்தின் முக்கிய வியாபார ஆலோசனைக் கூட்டம் ஒன்றை பெங்களூரு நகரில் கூட்டியிருந்தனர். இதற்காக பெங்களூரு வந்த அவர்கள், அங்குள்ள ஆலீவ் ரெசிடன்ஸி என்ற அய்ந்து நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு அறை தருமாறு கேட்டனர்.

முதலில் சரி என்று கூறிய விடுதி நிர்வாகம், பிறகு அவர்கள் இருவரில் ஒருவர் இஸ்லாமியர் என்று ஊகித்து, அவர்களது திருமணத்திற்கான சான்றிதழைக் கேட்டுள்ளனர்.  

அதற்கான சான்றுகளை கொடுத்த பிறகு, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இங்கு வந்தால் தங்குவதற்கு அறை தரமாட்டோம் என்று விடுதி நிர்வாகம் கூறிவிட்டது.

இது தொடர்பாக நாளிதழ் ஒன்று விடுதிப் பணியாளரிடம் கேட்டபோது,

‘‘நாங்கள் இந்து- - முஸ்லீம் திருமணத்தை விரும்புவதில்லை. எங்கள் பகுதியில் இந்து-  முஸ்லீம் திருமணம் என்பது தேவையில்லாத ஒன்று ஆகும். ஆகவே, நாங்கள், இவர்கள் எங்கள் விடுதியில் தங்குவதற்கு இடம் கொடுக்கவில்லை. இரண்டு வெவ்வேறு மதத்தவர் திருமணம் செய்துகொள்ள சாத்தியமில்லை. அப்படியே அவர்கள் திருமணம் செய்திருந்தாலும் இந்து--  முஸ்லீம் என்றால் நாங்கள் இடம் தரமாட்டோம் என்று கூறிவிட்டார். அதுமட்டுமின்றி இந்து- முஸ்லீம் கலப்புத் திருமணத் இணையரை விடுதியில் தங்க வைத்தால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கூறிவிட்டனர்''  என்று கூறினார்.

விடுதி நிர்வாகமும், பணியாளர்களுக்கு ஆதர வாக நடந்து கொண்டது.   

இது குறித்து பேசிய ஷபீக் நாங்கள் வெவ் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பொருளாதாரத்திலும் நல்ல நிலையில் உள்ளோம், எங்களுக்குள் மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அப்படி இருக்க, ஓட்டல் நிர்வாகம் மிகவும் பழைமைவாதத்தனமாக நடந்து கொண்டது. இது எங்களுக்கு மட்டுமே உள்ள அவமானம் கிடை யாது நாட்டில் காதலித்து திருமணம் செய்யும் அனைவருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று கூறினார்.

மேலும் ஓட்டல் நிர்வாகத்தின் தலைமையே ஊழியர்களிடம் இது போன்ற உத்தரவை பிறப்பித்திருப்பது, அதிர்ச்சியளிக்கும் செயலாக உள்ளது என்றார். இதுதொடர்பாக கேரள மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க இருப்ப தாகவும் குறிப்பிட்டார்.

விடுதி நிர்வாகத்திடம்...

இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் கேட்ட போது,

‘‘எங்கள் விடுதிக்கென்று சில விதிமுறைகளை நாங்கள் வகுத்துள்ளோம்'' என்று ஒற்றைவரியில் கூறிவிட்டார்கள்.

காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விடுதி மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner