பெங்களூரு, ஜூலை 8 -கருநாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இந்தி திணிப் புக்கு எதிராக கன்னட அமைப்புக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடைகள் மற்றும் வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை கறுப்பு வண்ணம் பூசி அழித்து வருகின்றனர். முதலில் பெங்களூரு மெட்ரோ ரயில்நிலை யங்களில் ஆரம்பித்த போராட்டம் தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.மத்திய பாஜக அரசானது, நாடு முழுவதும் இந்தித் திணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மத்திய அமைச்சர்களின் கடிதப் போக்குவரத்து துவங்கி, நாடாளுமன்ற அலுவல்களை முழுமையாக இந்திமயமாக் கும் நடவடிக்கையை துவக்கியுள்ள அவர்கள், நெடுஞ்சாலை மைல் கற்களிலும் மாநில மொழியை அழித்துவிட்டு, இந்தியை எழுதி வருகின்றனர்.
மோடி அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழகத்தில் துவங்கிய போராட்டம், அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கும் பரவியது. இதற்கு அடுத்ததாக தற்போது கருநாடக மாநிலத்திலும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெடித் துள்ளது.பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை யில் முழுக்க முழுக்க இந்தி திணிக்கப்பட்ட நிலையில், மாநில முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவில் இந்தியும் ஒரு மொழிதானே தவிர, அது தேசிய மொழியல்ல; எனவே, இந்தியைத் திணிக்கமோடி அரசு முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதையடுத்து, மெட்ரோ ரயில்நிலையங்களில் இந்தி எழுத் துக்களை அழிக்கும் போராட்டத்தை கன்னட அமைப்புக்கள் துவங்கின. அது தற்போது மெட்ரோ ரயில் நிலையத்தைக் கடந்து, பெங்களூரு மாநகரம் மற்றும் கருநாடகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
பெங்களூருவின் உடற்பயிற்சி மய்யங்கள், உணவு விடுதிகள், கடைகள், வணிக நிறு வனங்களின் பெயர்ப்பலகைகளில் எழுதப் பட்டுள்ள இந்தி எழுத்துக்களையும் அழிக்கும் போராட்டத்தில் கன்னட அமைப்புக்கள் இறங்கியுள்ளன. சர்வதேச உணவு விடுதியான மெக்டொனால்டு கிளையொன்றில் கன்னட அமைப்பினர் புகுந்து, ஏன் இங்கு கன்னடத் தில் பெயர் பலகை இல்லை, ஏன் கன்னடத்தை பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பி யதுடன், இந்தி சினிமா பாடல்களையும் ஒலிபரப்பவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.