எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, அக்.11 தீபவாளியின் போது வெடிக்கப்படும் பட்டாசு களால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, தலைநகர் பகுதியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் எனவும், மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner